அந்தக் காலத்தில் திருமண வயது ஆண்களுக்குப் பதினாறு என்றும், பெண்களுக்கு பன்னிரண்டு என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியின் திருமணத்தின் போது அவள் 'ஈராறு ஆண்டு அவகையினள்' என்றும், கோவலன் 'ஈரெட்டு வயதினன்' என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு வயதுகளின் சராசரி பதினான்கு. அதாவது, 14 ஆண்டுகளில் அடுத்த தலைமுறை உருவாகிவிடுகிறது.
எனவே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்து வரும் போது கோசலத்தில் இராமனை அறியாத, பரதனை மட்டுமே அறிந்த ஒரு புதிய தலைமுறை உருவாகி விடும்.இந்தத் தீய எண்ணத்து டன் தான் கைகேயி இராமனைப் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்கு அனுப்பும் படி தசரதனிடம் வரம் வேண்டினாள்.
கருத்துரையிடுக Facebook Disqus