0

காதல் என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவரும் அவரது கோணங்களில் இருந்து விளக்கம் கூறலாம். 
 
ஆனால், 6 வயது சிறுமி ஒருவர் அளித்துள்ள வித்தியாசமான விளக்கம் இணையதள வாசகர்களால் விரும்பிப் படிக்கப் பட்டு வருகிறது. 
 
காதலின் சின்னமாக தாஜ்மஹால் மற்றும் இதய வடிவம் குறிக்கப்படுகிறது. காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். 
 
சிலர் காவியங்களாகவே படைத்துள்ளனர். இன்னும் சிலர் தங்களது அனுபவங்களுடன் கற்பனைகளை கலந்து எழுத்தோவியங்களாக தீட்டியுள்ளனர். 
 
ஆனால், எம்மா என்ற 6 வயது சிறுமி தனது கோணத்தில் காதல் குறித்து தெரிவித்துள்ள வரிகள் இணையத்தில் பிரபலமாகியுள்ளது.

மழலை எழுத்துக்கள்.... 
உண்மையில் இது சிறுமி எழுதியது தானா என்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. நோட்டுப் புத்தகத்தில் இருந்து கிழிக்கப்பட்ட காகிதம் போன்ற ஒன்றில் மழலையான எழுத்தில் எழுதப் பட்டுள்ளது.

காதல்னா என்ன..? 
அப்பேப்பரின் தொடக்கத்தில் ‘காதல் என்றால் என்ன ?' என ஆங்கிலத்தில் ஒரு கேள்வியும், அதன் கீழே எம்மா.கே, வயது 6 எனவும் எழுதப்பட்டுள்ளது.
 
பல் விழுந்தாலும் புன்னகை... 
அதற்கும் கீழே காதல் என்றால் என்ன என்பதற்கு எம்மா கூறும் விளக்கமாக, ‘காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது.
 
தொடரும் காதல்... 
ஏனெனில் உங்களில் சில காணாமல் போனாலும் உங்களை உங்களது அன்பர் காதலிப்பார் என உங்களுக்கு தெரியும் என்பதால் என எழுதப்பட்டுள்ளது.

 இதயம்... 
கடைசியில் காதலின் குறியீடான இதயம் வரையப் பட்டுள்ளது. இவை அனைத்தும் பென்சிலால் எழுதப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top