நிலாவுக்கு அருகில் சனி, செவ்வாய் ஆகிய கோள்கள் வருவதை இன்று (திங்கள்) முதல் ஒன்றரை மாதத்துக்கு இரவு நேரத்தில் பார்க்கலாம்.
இதுகுறித்து
சென்னையில் உள்ள தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் (பிர்லா
கோளரங்கம்) செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் கூறியதாவது:
சூரியனை
நிலா 365.2 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. செவ்வாய் கிரகம் 686
நாட்களுக்கு ஒருமுறையும், சனி கிரகம் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்
சூரியனைச் சுற்றிவருகின்றன.
திங்கள்கிழமை
(இன்று) மாலை சூரியன் மறைந்த பிறகு, நிலாவுக்கு மிக அருகில் செவ்வாய், சனி
கிரகங்கள் தோன்றும். இதை 45 நாட்களுக்கு தொடர்ந்து பார்க்கலாம். இது 18
மாதங்களுக்கு ஒருமுறை ஏற்படும் நிகழ்வு. இதை தமிழகத்தில் பார்க்க முடியும்.
சில நேரங்களில் நிலாவுக்கு அருகில் புதன், வெள்ளி, செவ்வாய், சனி, வியாழன்
ஆகிய 5 கோள்கள் வரும் நிகழ்வும் நடந்திருக்கிறது.
கருத்துரையிடுக Facebook Disqus