0
கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வார்கள்.வீட்டை கட்டினால் மட்டும் போதாது. அதனை முறையாக பராமரிக்க வேண்டும். சின்னதாக பழுது ஏற்படும் போதோ அதனை சரிசெய்துவிட்டால் பொருள்சேதத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். ஆயிரத்து இறநுர்று பக்கங்களில் விளக்கமாக புகைப்படத்துடன் இந்த புத்தகத்தில் வீட்டினை பழுதுபார்த்தல் பற்றி கொடுத்துள்ளார்கள். 247 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் நமது வீட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள்  பழுதானால் எவ்வாறு சரி செய்வது என்று ஒவ்வொரு தலைப்பிலும் கெர்டுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



























ஒரு குறிப்பிட்ட பொருளை சரிசெய்வதற்கு தேவையான தளவாட சாமான்கள் பற்றியும் குறிப்பு கொடுத்துள்ளார்கள். சிறிய சிறிய பொருட்கள் என மொத்த இல்லத்திற்கும் தேவையானபொருளாக ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் போதுமானது. சுத்தி,வாள்.கடப்பாரை,ஆணி,கட்டிங்பேளயர்.ஸ்பெனர் செட்,பியூஸ் ஒயர் என வாங்கினால் போதுமானது.


பால்சீலிங்கில் ஏற்பட்ட பழுதினை எவ்வாறு சரிசெய்வது என்று படங்களாக விளக்கி உள்ளார்கள்.கீழே உள்ள படங்களை பாருங்கள். படங்களை பார்த்தாலே நமக்கு ஒரு ஐடியாதானே கிடைததுவிடும்.























கன்டினியூட்டி மீட்டர் மூலம் மின்சார சாதனங்களில் உள்ள இணைப்பு துண்டிப்பை எளிதாக அறியலாம். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.




ஒரு சின்ன பழுதாக இருக்கும். அதற்காக ஆட்களை கூப்பிட்டால் ஐந்து நிமிட வேலைக்கு கூட அறுநூறு ரூபாய் கேட்பார்கள்.எதோ நமக்கு தெரிந்தவரை சரிசெய்தால் நமக்கு பண்ம் மிச்சம் தானே....பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top