0
பப்பாய் (Popeye). எல்ஸீ க்ரிஸ்லர் சிகார் (Elzie Crisler Segar) என்ற அமெரிக்கர், 1929ல் உருவாக்கிய செய்தித்தாள் கார்ட்டூன் கதாபாத்திரம். பின்னாளில் காமிக்ஸ், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களாக வெளிவந்த கலக்கல் கனவான். 
 
கிரேக்கக் கடவுள்களில் பலசாலியான ஹெர்குலிஸ் வழி வந்தவன்தான், இந்த 'பப்பாய்’ என்று அவரே சொல்வார். ஆபத்தில் சிக்கியவுடன் கீரையைச் சாப்பிட்டு, வீரம் பெருக்கெடுத்து எதிரிகளைப் பந்தாடுவார். 



கீரையில் அபார சக்தி இருக்கிறது என்பதை பப்பாய் கண்டுபிடித்ததே சுவாரஸ்யமான கதை. ஒரு முறை, பப்பாய் ஒருவரிடம் அடிவாங்கி, கீரை வயலில் தூக்கி வீசப்பட்டார். எதேச்சையாக கீரையைச் சாப்பிட்டுவிட்டார். அப்போது கிடைத்த பலத்தின் மூலம்,கீரையை கப் எனப் பிடித்துக்கொண்டார்.

கருத்துரையிடுக Disqus

 
Top