மத்திய அரசின் காலிப்பணியிடங்களை பொது எழுத்துத் தேர்வு நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவதனால் ஸ்டாப் செலக்சன் கமிஷன் அமைப்பு நம் அனைவராலும் அறியப்படுகிறது. நம் நாட்டின் துணை ராணுவப் படைகளான பி.எஸ்.எப்., சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., எஸ்.எஸ்.பி., ஐ.டி.பி.பி., ஏ.ஆர்., என்.ஐ.ஏ., எஸ்.எஸ்.பி., போன்றவற்றில் கான்ஸ்டபிள் பதவிக்கு காலியாக உள்ள 62 ஆயிரத்து 390 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: பார்டர் செக்யூரிடி போர்ஸ் படையில் 22 ஆயிரத்து 517ம், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் 5 ஆயிரமும், சி.ஆர்.பி.எப்.,பில் 24 ஆயிரத்து 588ம், சகஸ்ட்ர சீமா பாலில் 6 ஆயிரத்து 224ம், ஐ.டி.பி.பி.,யில் 3 ஆயிரத்து 101ம், அசாம் ரைபிள்சில் 600ம், என்.ஐ.ஏ.,வில் 86ம், எஸ்.எஸ்.எப்.,பில் 274ம் சேர்த்து மொத்தம் 62 ஆயிரத்து 390 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 01.08.2015 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: சென்ட்ரல் ரெக்ரூட்மென்ட் ஸ்டாம்ப் வாயிலாக ரூ.50/-ஐ செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, பிசிக்கல் ஸ்டாண்டர்ட்ஸ் டெஸ்ட், பிசிக்கல் எபீசியன்சி டெஸ்ட் மற்றும் மருத்துவப் பரிசோதனை. எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை மற்றும் மதுரை மையங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் மற்றும் ஆப்-லைன் என்ற இரண்டு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.02.2015
இணையதள முகவரி: <http://ssc.nic.in/notice/examnotice/FINAL_NOTICE_(Employment%20News)_24_01_2014.pdf>
கருத்துரையிடுக Facebook Disqus