0

nikCfpy.jpg




நம் வீடுகளில் பிராட்பேண்ட் இணைப்புடன் வை - பி இணைக்கப்பட்டு பயன்படுத்தும் பழக்கம் பெருகி வருகிறது. இதற்குக் காரணம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் மட்டுமே புழங்கி வந்த வீடுகளில், லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி.க்கள், ஸ்மார்ட் போன்கள் எனப் பல வகையான மொபைல் சாதனங்களை ஒரே வீட்டில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். இவற்றுடன் நம் டிவி சாதனங்களும் ஸ்மார்ட் டி.வி. சாதனங்களாக மாறி வருவது இன்றைய நடைமுறையாக உள்ளது. 


இந்தச் சூழ்நிலையில், பலரும் குறைபட்டுக் கொள்ளும் நிலை வை பி இணைப்பின் வேகம் ஆகும். நிறுவிய சில மாதங்களிலேயே, வை பி இணைப்பின் வேகம் குறைவதும், அதன் ரேடியோ அலைகள் வீச்சின் சுற்றளவு குறைவதும் காணப்படுகிறது. வை பி ரெளட்டர் சாதனம் உள்ள அறையைத் தாண்டி அடுத்த அறைகளுக்குச் சென்றால், இணைப்பே கிடைக்காத நிலை, அல்லது அடிக்கடி இணைப்பு விலகும் நிலை, இணைப்பின் வேகம் குறையும் நிலை எனப் பல்வேறு சூழ்நிலைகளைச் சந்திக்கிறோம். இதற்கான தீர்வுகள் நம் கைகளிலேயே உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.



வை பி ரெளட்டர் அமைக்கும் இடம்:

KsGLLmK.jpg
வை பி ரெளட்டர் அமையும் இடத்தினை மிக எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனை வைத்து இயக்கும் இடமும் அதன் வேகம், அலைவீச்சின் தூரத்தை நிர்ணயம் செய்திடும். பாதுகாப்பான இடம் என்று கருதி, நாம் பார்க்க இயலாதபடி, ஏதேனும் சிறிய பீரோ, அல்லது மரப் பெட்டி அல்லது தொலைக்காட்சிப் பெட்டியின் பின்புறம் வைக்கக் கூடாது. மிகச் சிறந்த இடம் என்று சொன்னால், அது நம் வீட்டின் மையப் பகுதிதான். அல்லது, நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் சமமான தூரத்தில் அமையும் இடம் தான். நாம் பயன்படுத்தும் சாதனங்கள், ரெளட்டரின் அருகே இருந்தால், அவற்றை ஈதர்நெட் கேபிள்கள் கொண்டு, ரெளட்டருடன் இணைத்துப் பயன்படுத்துவது அனைத்து பிரச்னைகளையும் தீர்க்கும். வீடுகளில் உள்ள செங்கல் சுவர்கள் அல்லது உலோகத் தடுப்புகளுக்கு அருகே ரெளட்டரை வைத்து இயக்கக் கூடாது. இவை இச்சாதனம் அனுப்பும் அலைகளைத் தடுக்கும். 



பாதுகாப்பு வளையம் தேவை: 


நம் ரெளட்டர் இயக்கத்திற்கு பாதுகாப்பு தேவை. இது வேறு ஒன்றையும் குறிக்கவில்லை. ஒரு பாஸ்வேர்ட் கொடுத்து அதனை நமக்கு மட்டுமே உரிமையுடையதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இல்லை எனில், நம் நெட்வொர்க்கினை அருகில் வசிப்பவர் ஹைஜாக் செய்து கொண்டு செல்வார். நாம் அறியாமல் அவர் பயன்படுத்தினால்,  நிச்சயம் நமக்குக் கிடைக்கும் அலைவரிசையின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும். பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பினை ஏற்படுத்திவிட்டால், இந்தப் பிரச்னைக்கு வழி இல்லை. உங்களுக்கு அருகில் வசிப்பவர் தன் டேப்ளட் அல்லது ஸ்மார்ட் போனுடன் உங்கள் வீட்டிற்கு வந்து, நட்போடு பேசிக் கொண்டிருக்கையில், உங்கள் வை பி இணைய இணைப்பின் பாஸ்வேர்ட் கொடுங்கள். 


அவசரமாக இணையம் பார்க்க வேண்டியுள்ளது என்று கேட்டு, உங்கள் பாஸ்வேர்டை நீங்கள் கொடுத்துவிட்டால், அவர் வெளியேறியவுடன், பாஸ்வேர்டை மாற்றிவிடவும். இல்லை என்றால், அவர் உங்கள் அருகில் உள்ள அவர் வீட்டில் இருந்தவாறே பாஸ்வேர்ட் இடாமலேயே, வை பி இணைப்பினைப் பயன்படுத்த முடியும்.


டி.வி. வீடியோ பயன்படுத்த நேரம்: 

வை பி இணைய இணைப்பின் தன்மை, அதனைப் பயன்படுத்தும் சாதனங்களின் தன்மையைப் பொறுத்தும் அமையும். நீங்கள் மிக அதிகமாக வீடியோ அல்லது இணைய டிவி பயன்படுத்துபவராக இருந்தால், இது நீங்கள் மற்ற விஷயங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதைப் பாதிக்கும். எனவே, வீடியோ மற்றும் இணைய டிவி போன்றவற்றைப் பயன்படுத்த தனி நேரம் ஒதுக்குங்கள்.



மிகப் பெரிய வீடா? ரிபீட்டர் பயன்படுத்துக:


d8pSTrP.jpg

உங்கள் வீடு பல படுக்கை அறைகள் அல்லது மாடி கொண்டதா? அப்படியானால், வை பி இணைய இணைப்பு சில இடங்களில் மிக மிகக் குறைவாகவோ, அல்லது இல்லாமலோ இருக்க வாய்ப்பு உண்டு. இது போன்ற இடங்களில், ரிபீட்டரைப் பயன்படுத்துங்கள். இது அலுவலகங்களுக்கும் பொருந்தும். ரிபீட்டர் பொதுவாக மலிவான விலையிலேயே கிடைக்கும். சில ரெளட்டர்கள் இது போன்ற “அணுகல் வழி முனைகளை” ("access point") பயன்படுத்தும் வகையிலான வசதிகளைக் கொண்டதாகவே இருக்கும். அவற்றைப் பயன்படுத்துகையில், இது போன்ற ரிபீட்டர்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்தலாம்.
ரெளட்டருக்குச் செலவு செய்திடத் தயங்க வேண்டாம்


நீங்கள் வாங்கிப் பயன்படுத்தும் ரெளட்டர் நவீன வசதிகள் கொண்டதாக இருக்கட்டும். விலை குறைவானதாக வாங்கினால், அனைத்து பிரச்னைகளும் வரத் தொடங்கும். எனவே, வாங்கும்போது, சற்று செலவு கூடுதலாக இருந்தாலும், நல்ல நவீன ரெளட்டராக வாங்கி இணைக்கவும். இது சில ஆண்டுகளுக்காவது, எந்தப் பிரச்னையையும் தராது. வாங்கும்போதே, அதற்கான ரிபீட்டரையும் வாங்கி, வீட்டின் மறுபுறம் உள்ள அறையில் வைத்து இயக்கவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top