0

 
1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.

KAmtWgq.jpg
2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என அழைத்தனர்.
 
3. Frederick Cohen என்ற மாணவர், வைரஸ் (“virus,”) என்ற சொல்லை முதன் முதலில், கம்ப்யூட்டரைக் கெடுக்கும் புரோகிராமிற்குப் பயன்படுத்தினார். இவர் கலிபோர்னியா பொறியியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 'தானாகவே, தன்னைப் பெருக்கிக் கொள்ளும் புரோகிராமிற்கு' இந்த சொல்லை வடிவமைத்துப் பயன்படுத்தினார். தன் வகுப்பு தோழர்கள் அறிந்து கொள்ள வைரஸ் புரோகிராம் ஒன்றைத் தயாரித்துக் காட்டினார். பின்னர் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதைக் கீழ்க்காணும் விளக்கத்துடன் விவரித்தார்.”கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களைக் கெடுத்து, அவற்றைப் போலவே நகலினை உண்டாக்கும் புரோகிராம்”.இவரே, இத்தகைய வைரஸ் புரோகிராம்களைத் தடுக்கும் தொழில் நுட்ப வழிகளை உருவாக்கிக் காட்டினார். பின்னர், அவரே, 1987 ஆம் ஆண்டு, அனைத்து வைரஸ்களையும் கண்டறிய ஒரு வழியினால் முடியாது என்று நிரூபித்தார்.
 

4. இன்டர்நெட் (“internet”) என்னும் சொல், 1882 ஆம் ஆண்டிலேயே புழங்கப்பட்டது. “ஒன்றோடொன்று இணைந்த, இணைக்கப்பட்ட செயல்பாடுகள்” என்பதனைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. பின், ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், 1982ல், உலகளாவிய டி.சி.பி/ஐ.பி. நெட்வொர்க் இணைப்பினைக் குறிக்க இது பயன்பட்டது

கருத்துரையிடுக Disqus

 
Top