0
 


"போர் வேண்டாம்", "அணு ஆயுதங்கள் வேண்டாம்" என்று உலக நாடுகள் மாறி மாறி கோஷம் போட்டாலும், உள்ளுக்குள் அமைதி புறாவை சுட்டுக் கொல்லும் நாடுகள் தான் இங்கு அதிகம் என்பதே நிதர்சனம்..!

வான்வெளி ஆயுதங்களுக்கு தடை விதிக்க கோரி அமெரிக்கா போன்ற சூப்பர் பவர் நாடு குரல் கொடுத்தாலும், ஏனைய நாடுகள் யூகிக்க இயலாத அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிரொலியாக வான்வெளி ஆயிதங்களை உருவாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் முனைப்பாகத்தான் இருக்கிறது.
 
10. மிஸ்ஸில் (Missile) : ஏவுகணைகள் நாம் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை. சீனாவின் சோதனைப்படி அவைகள் விண்வெளிக்கு சென்று செயற்கைகோள்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவைகள்..!

09. டார்பா (DARPA) : டார்பா என்பது டிஃபென்ஸ் அட்வான்ஸ்டு ரிசர்ச் ப்ராஜக்ட்ஸ் ஏஜென்சி (Defense Advanced Research Projects Agency) ஆகும்..!

இந்த ஆயுதமானது எலெக்ட்ரோ காந்த சக்தியை பயன்படுத்தி நினைத்து கூட பார்க்க முடியாத வேகத்தில் இலக்கை தாக்கும்..!
 
08. தெல் (THEL) : அதாவது டாக்டிக்கல் ஹை எனர்ஜி லேசர் (Tactical High Energy Laser) என்று அர்த்தம்..! இந்த அதிநவீன ஆயுதம் அதிகப்பபடியான மைக்ரோவேவ் மூலம் லேசர் தாக்குதலை இது நடத்துமாம்..!


இந்த வகை ஆயுத தயாரிப்போடு அமெரிக்காவிற்கு தொடர்பு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது..!
 
07. காஸ்மிக் செயற்கைகோள்கள் (Cosmic Satellites) : இந்த செயற்கைகோள்கள் வேறு நாட்டு செயற்கைகோள்களோடு பொருந்திக் கொண்டு அதை செயல் இழக்க வைக்கவோ அல்லது அழிக்கவோ கூட செய்யுமாம்..!

இவ்வகை மைக்ரோ மற்றும் நானோ செயற்கை கோள்கள் பெரும்பாலும் ராணுவ பயன்பாட்டிற்க்கே விண்ணில் செலுத்தப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..!

06. சோவியத் யூனியனின் அல்மாஸ் விண்வெளி மையம் (Almaz) : இது சோவியத் யூனியனால் 1960 மற்றும் 1970-களில் உருவாக்கப்பட்ட ஒரு அதி நவீன விண்வெளி ஆயுதமாகும்..!
விண்ணில் செலுத்தப்படும் இது ஒரு பீரங்கியை போல் செயல்படுமாம். செயற்கைகோள் மற்றும் தாக்க வரும் விண்வெளிக்கோள்ளை ஒன்றுமில்லாது ஆக்கி விடுமாம்..!
 
05. மோள் (MOL) : அமெரிக்க விமானப்படையை சேர்ந்த அதிநவீன ஆயுதம்தான் மோள், அதாவது மேன்டு ஆர்பிட்டல் லாப்ரேட்டரி (Manned Orbital Laboratory) ஆகும்..!
 
04. ஐசிபிஎம் (ICBM) : அணு ஆயுத தாக்குதல் என்று ஒன்று நடந்தால் அந்த தாக்குதலை தவுடு பொடியாக்கி விடும் இந்த ஐசிபிஎம் (intercontinental ballistic missile)..!

ஐசிபிஎம் : தாக்க வரும் அணு ஆயுதத்தை விண்ணிலேயே தாக்கி அழிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆயுதம்..!
 
03. எக்ஸ்-37பி ஓடிவி (X-37B OTV) : முழுக்க முழுக்க இது ஒரு அமெரிக்க தயாரிப்பாகும். ஏப்ரல் 20, 2010 அன்று இது பரிசோதிக்கபட்டதாம்..!
 
இது விண்ணில் பறந்தபடியே குறி வைத்து 'டங்ஸ்டன் ராட்' ஆயுதங்களை (Tungsten rods) வீசி தாக்கும் வல்லமை பெற்றது. அதை 'ராட்ஸ் ஃப்ரம் காட்' (Rods from God) என்கின்றனர் அமெரிக்கர்கள்..!
 
02. ஹை-ஆல்ட்டியூட் வெப்பன்ஸ் (High-altitude Weapons) : இவ்வகை உயிர்நிலை அதிநவீன ஆயுதமானது எலெக்ட்ரோ காந்த சக்தியை பயன்படுத்தி எலெக்ட்ரானிக் மற்றும் எலெக்ட்ரிக்கல் கருவிகளை அதிக பட்சம் அழிக்குமாம், குறைந்த பட்சம் செயல்பட விடாமல் செய்து விடுமாம்..!

01. சூரியனைச் சுற்றி வரும் குறுங்கோள் (Asteroid) : இது கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட ஒரு ஆயுதமாகும். அதாவது சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை கட்டுப்படுத்தி அதை குறிப்பிட்ட இலக்கை நோக்கி செலுத்துவது..!

கருத்துரையிடுக Disqus

 
Top