0

சிலர் பாடம் எடுக்கும் விதத்திற்காகவே அவர்களை நமக்கு பிடித்து போய் இருக்கும்.சிலரை அதற்காகவே பிடிக்காமலும் போய் இருக்க கூடும். 

நமது தமிழகத்தில் பெரும்பாலும் ஆசிரியருக்கு என்று ஒரு சிறப்பு மரியாதை இருந்து வருகிறது.தனியார் பள்ளிகளில் Vs அரசு பள்ளிகள்ஆசிரியர் ஊதியம் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து இந்த ஆசிரியர் துறையில் மட்டும் தான் ஊதிய வேறுபாடு மிக அதிகம். அதற்கான காரணம் ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.சில மாதங்களுக்கு முன்பு சுகந்தி என்ற டீச்சர் என்னை மிகவும் பாதிப்படைய செய்து விட்டார்.

அவர் வேறு யாரும் அல்ல.வேதார்ணயம் பள்ளி பஸ் விபத்தில் பள்ளி குழந்தைகளை காப்பாற்ற முற்பட்டு உயிர் இழந்த அந்த பெண் தான். இந்த தியாகத்துக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பட்டு உள்ளது.அவருக்கு நல்லாசிரியர் விருதும் கூட வழங்கி இருக்கலாம்.அவர் 11 குழந்தைகளை காப்பாற்றி உள்ளதாக சொல்ல படுகிறது.அவர் குழந்தைகளை காப்பாற்றும் போது தனது job description படி இதை நான் செய்ய வேண்டுமா என்று யோசித்து இருக்க மாட்டார் என்றே எனக்கு படுகிறது

.எப்படியோ அவர் காப்பாற்றிய குழந்தைகளில் ஒருவராவது அவர் கடைசியாய் சொல்லி கொடுத்த ஆபத்தில் உதவுவது என்பதை அவர்கள் வளர்ந்த பின்னர் உணருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்மால் செய்ய முடியாதை செய்யும் யாரும் ஹீரோ தான் ... 

அப்படி பார்த்தால் இந்த சுகந்தியும் ஒரு ஹீரோ தான்.. 

பாடம் கற்று கொடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியர் என்றால் எல்லாரும் எல்லாருக்கும் பாடம் கற்று கொடுத்து கொண்டு இருக்கும் இவரைப்போன்ற ஆசிரியர் அனைவருக்கும் "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்."

கருத்துரையிடுக Disqus

 
Top