இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய்
தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும்
தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி..
தமிழ் பேப்பர் நாலு ரூபாய்’ என்பதைப் பார்த்ததும்
தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி..
இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை
வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்
வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள்
எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா…!
சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,…
இந்தாங்கம்மா தொண்ணூறு ரூபாய் என அவன் கொடுத்து சென்றான் ஏதோ …சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள் சாந்தி!
மாலை அதே பேப்பர்காரனைப் பார்த்ததும் கொஞ்சம் வெல வெலத்துப்போனாள்…
என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…?
பேப்பருக்கு இடையில…!
என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க…?
பேப்பருக்கு இடையில…!
அவன் பேப் பேச சாந்திக்கு வியர்த்தது!
‘இந்த அஞ்சு பவுன் செயின் இருந்தது, பவுன் விற்கிற
விலைக்கு, இப்படியா அலட்சியமா இருக்கிறது|?
இந்தாங்கம்மா…!
என எடுத்து நீட்ட….
அவன் தங்கமாகவும் தான் கிழிந்த பழைய பேப்பருமாக
மாறி இருந்ததை சாந்தியால் உணர முடிந்தது!!
மாறி இருந்ததை சாந்தியால் உணர முடிந்தது!!
கருத்துரையிடுக Facebook Disqus