0
அலுவலகமாகட்டும்.இல்லமாக இருந்தாலும் நமக்கு என்று தனியாக கணக்குகளும்.படங்களும்.வீடியோக்களும் உண்டு. அவ்வாறு உள்ள பைல்களை .போல்டர்களை.சிடிக்களை பாதுகாக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இஙகு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

 இதில் நம்மிடம் உள்ள டிரைவ் மற்றும் போல்டர் டரைவ்களை தெரியவரும் இதில் நாம் எந்த டிரைவ்வினை பாதுகாக்க வேண்டுமோ அந்த டிரைவினை தேர்வு செய்யவும்.டிரைவினை ஐகானை நீங்கள் கிளிக் செய்ததும் அது தானே லாக் ஆகிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்து அதனை பாதுகாக்கவேண்டூனாலும் பாதுகாக்கலாம். அதற்கான வசதியையும் கொடுத்துள்ளார்கள்.
 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்து நீங்கள் சிடி டிரைவினை திறக்காதவாறு லாக் செய்துவிடலாம். சேப் மோடினையும் லாக் செய்துவிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து ஓ.கே.கொடுத்த பின்னர் நீங்கள் குறிப்பிட்ட டிரைவினை திறக்க முயற்சிக்கையில் உங்களக்கு திறக்க முடியாதவாறு கீழ்கண்ட எச்சரிக்கை செய்தி வரும்.

கருத்துரையிடுக Disqus

 
Top