0
WhatsApp அப்ளிகேஷன் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். WhatsApp பரவலாக அனைவரும் பயன்படுத்த தொடங்கிய போது பிரபல சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் கூட இரண்டாம் பட்சம் ஆகி போனது. இதை முன்கூட்டியே தெரிந்துதான் பேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது நினைவிருக்கலாம். இன்று ஒரு பில்லியன் அதாவது பத்து கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் வாட்ஸ்ஆப்தான்.

வாட்ஸ்ஆப்ல உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து இருந்தால் நேரடியாக நீங்கள் கண்டுப்பிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுப்பிடிக்கலாம். எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

1. அந்த ந(ண்)பரின் last seen மற்றும் online போன்ற விவரங்கள் தெரியாது.  ஆனால் இதை மட்டும் வைத்து பிளாக் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இப்போது last seen மற்றும் ஆன்லைனில் இருப்பதை மறைக்க Privacy செட்டிங்ஸ்ல வழி இருக்கு.

2. உங்களை பிளாக் செய்தவருக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் அனுப்பினால் ஒரு டிக் மட்டுமே தெரியும். அதாவது WhatsApp சர்வர்க்கு உங்கள் மெசேஜ் சென்றடைந்து விட்டது.  உங்கள் மெசேஜ் அனுப்பியவருக்கு டெலிவரி ஆகாது. இதை வைத்து உறுதியாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்பதை சொல்லிவிடலாம். கீழே படம் பாருங்கள்.

3. உங்களை பிளாக் செய்தவர் Profile படம் அல்லது வேறு பெயர் மாற்றி இருந்தால் அது உங்களுக்கு அப்டேட் ஆகாது. பழைய படமும், முந்தைய ப்ரோஃபைல் பெயரும் எப்போதும் உங்களுக்கு மட்டும் மாறவே மாறாது. இதை வைத்தும்‌ உறுதியாக நீங்கள் அந்த நபரால் பிளாக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்பதை சொல்லிவிடலாம்.


4. நீங்கள் WhatsApp மூலம் கால் செய்தால் உங்களை பிளாக் செய்த நபருக்கு கால் போகாது/ரிங் ஆகாது.


இந்த நான்கு வழிகளில் உங்களை ஒருவர் பிளாக் செய்துள்ளாரா என்பதை கண்டறியலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top