0


Nanorobots-in-Cancer-Detection-and-Treat

புற்றுநோய்க் கலங்களுடன் போராடக்கூடிய நனோ டேமினேட்டர்கள் !!
torrborder.gif

திரவ உலோகத்தினைக் கொண்டு புற்றுநோய்க் கலங்களுடன் போராடக்கூடிய நனோ டேமினேட்டர்களை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இதனை சாதாரண மாத்திரைகளை வழங்குவது போன்று புற்றுநோய்க் கலங்களை நோக்கி செலுத்தி அவற்றுடன் போராடி அழிவடையச் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி North Carolina's State பல்கலைக்கழகம் மற்றும் பயோ மெடிக்கல் பொறியலாளரான Zhen Gu என்பவர் தெரிவிக்கையில் “இது வைத்தியர்களுக்கு மிகவும் இலகுவான முறையாக காணப்படும் எனவும், புற்றுநோய்க் கட்டிகளை விரைவாக கண்டறிவதற்கும் உதவும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த டேர்மினேட்டர்கள் 100 நனோ மீற்றர்கள் விட்டம் கொண்ட திரவத்துளிகள் போன்ற வடிவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதியில் VIMEO !!
torrborder.gif
vimeo-600x210.jpg

  முன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது 4K எனப்படும் அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியினை முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது Vimeo இவ் வசதியினை அறிமுகம் செய்துள்ளது,

இத் தொழிநுட்பம் சில வகை தொலைக்காட்சிகளிலும் காணப்படுவதுடன், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் ஊடாக யூடியூப், Vimeo ஆகியவற்றினைப் பயன்படுத்துபவர்களும் இவ் வசதியினைப் பெறமுடியும்.

எனினும் அப்பிள் தொலைக்காட்சிக்கான அப்பிளிக்கேஷனை விரைவில் வெளியிடவுள்ள Vimeo நிறுவனம் iPhone 6 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் 4K வீடியோக்களை எடிட் செய்யக்கூடிய வசதியினை ஏற்கணவே வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 

குறைந்த மின் சக்தியிலும் இயங்கக்கூடிய தொடுதிரை !!
torrborder.gif

CUZYjdIWsAEj8lV.jpg

தற்போது அதிகளவில் பாவனையிலுள்ள ஸ்மார்ட் மொபைல் சாதனங்களின் தொடுதிரையானது மின்சக்தியை வெகுவாக நுகர்கின்றது.

இதனால் அவற்றில் இணைக்கப்பட்டிருக்கும் மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குகின்றன. இப் பிரச்சினைக் தீர்வாக குறைந்த மின் சக்தியிலும் இயங்கக்கூடிய தொடுதிரையினை உருவாக்குவதற்கான முயற்சியில் ஐக்கிய இராச்சிய விஞ்ஞானிகள் வெற்றிகண்டுள்ளனர்.

Germanium-Antimony-Tellurium (GST) திரவியத்தினைக் கொண்டு 7 நனோமீற்றர்கள் தடிப்பு உடைய படைகளைக் கொண்டு இத் தொடுதிரைகள் உருவாக்கப்படும்.

இத் தொடுதிரைகள் அடுத்த 12 மாதங்களில் ஸ்மார்ட் மொபைல் சாதனங்களில் பாவனைக்கு வரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.


YAHOO MESSENGER !!
torrborder.gif

Yahoo-Messenger-Is-Closing-Down-2.jpg

பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனைப் போன்று குறுஞ்செய்திகள், படங்கள் என்பவற்றினை நண்பர்களுடன் பரிமாற்றிக் கொள்ளக்கூடிய அப்பிளிக்கேஷனை யாகூ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது.

ஆனால் குறித்த அப்பிளிக்கேஷன் பாவனையில் பின்னடைவை சந்தித்து வந்ததை தொடர்ந்து சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாகவும், இடைமுகத்தில் மாற்றத்தினை மேற்கொண்டும் புதிதாக அறிமுகம் செய்துள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட Yahoo Messenger அப்பிளிக்கேஷன் ஆனது விரைவாக செயற்படக்கூடியதாகவும், கவர்ச்சியான பயனர் இடைமுகத்தினைக் கொண்டாகவும் இருக்கின்றது.

இதில் iMessage எனப்படும் உயர் பிரிதிறன்கொண்ட புகைப்படங்களை பரிமாறிக்கொள்ளும் வதியும் தரப்பட்டுள்ளதாக இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்குவதில் பங்குபற்றிய மூத்த இயக்குனரான Austin Shoemaker என்பவர் தெரிவித்துள்ளார்.


பழைய போன்களின் சிறப்பு
torrborder.gif

3465931961_bc645a5e7d.jpg

எல்லாமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலும் சிலருக்கு கவுரவம். ஆனால் தற்போதைய ஸ்மார்ட்போன்களை விட, பத்தாண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பழைய போன்களே சிறப்பானது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

சிக்னல்கள் கிடைப்பதில் ஸ்மார்ட்போன்களை விட சாதாரண போன்கள் 7 மடங்கு கூடுதல் செயல் திறன் கொண்டதாம்.

கிளாஸ், உலோகங்கள் மற்றும் மெலிதான மேற்புறம் போன்றவை காரணமாக ஸ்மார்ட்போன்கள் சிக்னல்களை பெறுவதில் குறைவான செயல்பாடு கொண்டுள்ளது என்கிறது அந்த ஆய்வு. பிளாஸ்டிக் மேற்புறம் இருந்த பழைய நோக்கியா போன்களில் இந்த சிக்கல்கள் இல்லையாம். அதுபோல பேட்டரிகளின் பயன்பாட்டிலும் பழைய போன்களே சிறப்பாக இருந்தது என்கிறது அந்த ஆய்வு.


வாகன உபகரணம்
torrborder.gif

tyre_2648115f.jpg

  வாகனங்களின் சக்கரங்கள் சேறுகளிலோ அல்லது மணல்களிலோ சிக்கிக்கொண்டால் வெளியே எடுப்பது மிக சிரமமானது. இதை எளிதாக்க ’டிரட் புரோ’ என்கிற உபகரணத்தை உருவாக்கியுள்ளனர் ஆஸ்திரேலியாவில் ஒரு நண்பர்கள் குழுவினர்.

சக்கரங்கள் சிக்கிகொண்டால் சக்கரத்துக்கு அடியில் இதனை சொருகிவிட்டு வாகனத்தை இயக்கினால் எளிதாக வாகனம் நகர்ந்து விடும்.

சக்கரத்தோடு பிடிமானம் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. டயர்களை சேதப்படுத்தாமல் பிடிமானம் கிடைக்கும் வகையில் உள்ள இந்த உபகரணம் எடை குறைவானதும், கையாள எளிதாகவும் இருக்கும் என்கிறது உருவாக்கியுள்ள குழு.


மின்குமிழ்களால் Wi-Fi வலையமைப்பு பாதிக்கப்படும்
torrborder.gif

index1.png

தற்போது அனைத்துவகையான மொபைல் சாதனங்களிலும் Wi-Fi தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏனைய வயர்லெஸ் தொழில்நுட்பங்களை விடவும் நீண்ட தூரத்திற்கு வலையமைப்பு ஏற்படுத்த முடியுவதுடன், வேகமாகவும் தரவுகளைப் பரிமாற்றம் செய்ய முடியும்.

indexஇதன் காரணமாக வயர்லெஸ் இணைய தொழில்நுட்பங்களிலேயே இந்த Wi-Fi தொழில்நுட்பம் மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.  எனினும் இத் தொழில்நுட்பத்திற்கு மின்குமிழ்களின் வெளிச்சம் பாதகமாக அமைவதாக தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கிஸ்துமஸ் காலத்தில் அதிகளவில் மேற்கொள்ளப்படும் மின்குமிழ் அலங்காரங்களைக் கருத்தில் கொண்டே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதனை பிரித்தானியாவின் திறந்த பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றுபவரானஅன்றூ ஸ்மித்த என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு காரணம் ஒளி அலைகளின் குறுக்கீடு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


புளூட்டோ கிரகத்தின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டது நாசா!…
torrborder.gif

NASA-Releases-the-First-Batch-of-its-Sha

  வாஷிங்டன்:-நாசாவின் இந்த ஆண்டுக்கான விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளது புளூட்டோ கிரகம், சில மாதங்களுக்கு முன் புளூட்டோவில் தெரியும் இதய வடிவம் குறித்தும், அங்குள்ள நிலவுகள் குறித்தும் ஆச்சர்ய தகவல்களை வெளியிட்ட நாசா, தற்போது முதல்முறையாக நியூ ஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுதியை வெளியிட்டுள்ளது.


ஒரு பிக்சலுக்கு 250-250 அடி வரை கொண்ட இந்த புகைப்படங்கள் புளூட்டோ கிரகம் குறித்த ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துரையிடுக Disqus

 
Top