0

5726-1.jpg

உலக வரலாற்றில் நமக்கு தெரியாமல் பல்வேறு விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இன்று நாம் உண்மை என நம்பி வரும் எல்லாவற்றிலும் மறைக்கப்பட்ட உண்மை அடங்கும். இன்று வரை பல்வேறு பொய் கதைகளை உண்மை என நம்பி கொண்டிருக்கும் போது கணினி துறையில் மறைக்கப்பட்ட உண்மைகள் சிலவற்றை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

உலகின் முதல் கணினி ப்ரோகிராமை கண்டறிந்தவர் ஒரு பெண், இது போல் கணினி யுகத்தில் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கங்களின் முக்கிய தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்கிளில் பாருங்கள். 

05-1449288752-01.jpg

முதல் கணினி

1821 ஆம் ஆண்டு டிஃபரென்ஸ் என்ஜின் என்ற பெயர் கொண்ட கருவி தான் உலகின் முதல் கணினி என அழைக்கப்படுகின்றது. 

05-1449288753-02.jpg

அனாலட்டிக்கல் என்ஜின்

உலகின் முதல் ஜெனரல் பர்ப்பஸ் கம்ப்யூட்டர் என்ற பெருமையை 1834 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அனாலட்டிக்கல் என்ஜின் எனும் கணினி பெற்றுள்ளது. 

05-1449288754-03.jpg

கம்ப்யூட்டர் ப்ரோகிராம் 

உலகின் முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராமரான அடா லோவலெஸ் வகுத்த சில கோட்பாடுகள் உலகின் முதல் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் என அழைக்கப்படுகின்றது. 

05-1449288756-04.jpg

ப்ரோகிராமிங் கம்ப்யூட்டர் 

உலகின் முதல் ப்ரோகிராமிங் கம்ப்யூட்டராக கருதப்படும் இசட்3 வகை கணினி 1941 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

05-1449288757-05.jpg

பொது கணினி 

ப்ரோகிராம் செய்யப்பட்டு பொது மக்கள் புயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட முதல் கணினி 1946 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

05-1449288758-06.jpg

ட்ராக்பால்

1952 ஆம் ஆண்டு கனடா நாட்டின் கடற்படை பயன்படுத்திய ட்ராக்பால் கருவியை டாம் க்ரான்ஸ்டன் மற்றும் அவரது குழுவினர் இணைந்து தயாரித்தனர்.

05-1449288759-07.jpg

சைமன்

1950 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சைமன் கம்ப்யூட்டர் தான் மனிதர்களின் சொந்த பயன்பாட்டிற்காக கண்டறியப்பட்ட முதல் கணினி ஆகும். 

05-1449288761-08.jpg

ரியல்-டைம் கிராஃபிக்ஸ் டிஸ்ப்ளே கம்ப்யூட்டர் 

உலகின் முதல் ரியல்-டைம் கிராஃபிக்ஸ் டிஸ்ப்ளே கொண்ட கம்ப்யூட்டர் 1951 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

SRI_Computer_Mouse.jpg

முதல் மவுஸ்

1964 ஆம் ஆண்டு டௌக்ளஸ் என்ஜெல்பர்ட் என்பவர் கணினிகளுக்கான முதல் மவுஸ் கருவியை கண்டுபிடித்தார்.

கருத்துரையிடுக Disqus

 
Top