0

28-1451301157-1.png
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளர். மேலும் குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலத்தில் ஐன்ஸ்டைன் என்ற பெயர் ஆனது அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல் என்றாகி விட்டது என்பது தான் நிதர்சனம்.

அப்படியான அழியா புகழைப்பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கப்பெறுகின்ற வகையில் வலைதளம்ஒன்று உள்ளது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?

 》》》  http://einsteinpaper...s.princeton.edu 《《《



பேப்பர்ஸ் ப்ராஜெக்ட் :

டிஜிட்டல் ஐன்ஸ்டைன் பேப்பர்ஸ் ப்ராஜெக்ட் (Digital Einstein Papers project) வலைதளம் ஒன்றின் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் ஆன்லைனில் இலவசமாக பெறப்படும் படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.

28-1451301159-2.jpeg

பிரின்ஸ்டன் பல்கலைகழகம் :

இந்த வலைதளத்தை நிறுவியது அமெரிக்காவை சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைகழகம் (Princeton University) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

28-1451301160-3.jpg

விரிவான மரபுகள் :

இதன் மூலம் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய விரிவான மரபுகள் பொதுவான ஒரு தளத்தில் ஒரு திறந்தநிலை அணுகலை பெறும். 


80,000 ஆவணங்கள் :

சுமார் 80,000 ஆவணங்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மூலம் உருவாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

28-1451301164-5.jpg

பதிப்புரிமை :

1955-ஆம் ஆண்டு இறந்தப்போது பிரின்ஸ்டன் யுனிவர்சிட்டி பிரஸ் மற்றும் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் ஆகியவைகளுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆவணங்களின் பதிப்புரிமை வழங்கப்பட்டு இருந்தது. 


இலவசமாக மக்களுக்கு வழங்க முடிவு :

30 வருடங்களுக்கும் மேலான நடத்தப்பட்ட ஆய்விற்க்கு பின் ஆவணங்களை இலவசமாக மக்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. 

28-1451301167-7.png

2900 ஆவணங்கள் :

இந்த வலைதளத்தில் இதுவரை 7000 பக்கங்கள் உள்ளடக்கிய 2900 ஆவணங்கள் கிடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக Disqus

 
Top