உலகெங்கும்
பல்வேறு பகுதிகளில் ரகசியமாக இயங்கி வரும் நிலத்தடி ஏலியன் தளங்கள்
இருப்பதாக நம்பப்பட்டு வருகின்றது. இங்கு பலரும் அறிந்திராத சோதனைகளும்,
ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. அந்த வகையில் உலகில்
ரகிசியமாக கருதப்படும் டாப் 10 ஏலியன் தளங்கள் சார்ந்த தகவல்கள்
ஐரோப்பா
இங்கிலாந்தின்
வில்ட்ஷையர் பகுதியில் அமைந்திருக்கும் பார்டன் டவுன் பேஸ் நிலத்தடியில்
இயங்கி வரும் ரகசிய ஏலியன் தளமாக நம்பப்படுகின்றது.
முதலாம் உலக போர்
முதலாம் உலக
போரின் போது இங்கு கேஸ் மாஸ்க் தொழிஸ்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு பணிகள்
நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது. இப்பகுதியில் அதிகப்படியான க்ராப்
வட்டங்கள் ஏற்படுவதால் இங்கு ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என்றும்
கூறப்படுகின்றது.
ஸ்டஃபோர்ட்ஷையர்
இங்கிலாந்தின்
ஸ்டஃபோர்ட்ஷையர் பகுதியில் ஊழியர் ஒருவரால் மிகப்பெரிய இரும்பு தட்டு
கண்டெடுக்கப்பட்டது. இந்த தட்டு சுரங்கப்பாதையின் கதவு போன்று இயங்கி
வந்ததாக கூறப்படுகின்றது.
சுரங்கம்
மூடப்பட்டிருக்கும்
சுரங்கம் ஏலியன் தளத்திற்கு வழி செய்யும் என நம்பப்படுவதோடு, இது குறித்த
முழு விவரமும் 18 ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆய்வு புத்தகமான 'ஏ ஹிஸ்ட்ரி
ஆஃப் ஸ்டஃபோர்ட்ஷையர்' இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடா
கனடாவின்
நியூஃபவுன்ட்லேண்ட் பகுதியில் அமைந்திருக்கும் இரும்பு சுரங்கமானது பல்வேறு
வினோத நடவடிக்கைகளுக்கு பின் முழுமையாக மூடப்பட்டு விட்டது. இந்த
சுரங்கமானது மற்றவைகளை விட மிகவும் ஆழமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்
இந்த
சுரங்கத்தில் வினோதமான வடிவம் மற்றும் உருவங்களை நேரில் கண்டதாக பலரும்
தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இங்கு ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என
நம்பப்படுகின்றது.
கனடா
நஹானி
பள்ளத்தாக்கில் மர்மமான இடம் ஒன்று இருப்பதாகவும், இங்கு செல்பவர்கள்
பெரும்பாலும் இறந்து விடுவதாகவும் கூறப்படுகின்றது. அதுவும்
மரணிப்பவர்களின் தலையில் பலத்த காயங்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அச்சம்
இது போன்ற
தொடர் சம்பவங்கள் அப்பகுதி மக்களின் மனதில் பயத்தை உண்டாக்கியிருக்கின்றது.
இதன் காரணமாக அப்பகுதியில் ஏலியன் நடமாட்டம் இருக்கலாம் என்றும்
நம்பப்படுகின்றது.
ரஷ்யா
ரஷ்யாவின் ரோஸ்வெல் அல்லது சிஹிட்குர் தளத்தில் பல்வேறு ஏலியன் சார்ந்த நடவடிக்கைகள் அரங்கேறி வருவதாக நம்பப்படுகின்றது.
ஏவுதளம்
அதிகாரப்பூர்வமாக
இப்பகுதியில் ராக்கெட் ஏவும் தளமாக கூறப்பட்டாலும், இங்கு அனைத்து வித
வினோதமான ஆய்வுகளும், சோதனைகளும் நடத்தப்படுகின்றது.
அமெரிக்கா
லிட்டில் கொலராடோ மற்றும் கொலராடோ ஆறுகளின் அருகே அமைந்துள்ள இந்த குகைகளில் எறும்பு மனிதர்கள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகின்றது.
மத்திய அமெரிக்கா
இந்த குகை
பகுதிகள் மத்திய அமெரிக்க, எகிப்து மற்றும் கிழக்கித்திய கைவினை பொருள்கள்
கண்டெடுக்கப்பட்டது இங்கு ஏலியன் தளம் இயங்கு வருவதை உறுதி செய்வதாக
அமைந்துள்ளது.
கலிஃபோர்னியா
கலிஃபோர்னியாவின்
ஷாஸ்தா மலைப்பகுதியில் பல்வேறு சுரங்கங்கள் இருப்பதாகவும், இவை நிலத்தடி
ஏலியன் தளங்களுக்கு செல்லும் என்றும் கூறப்படுகின்றது.
அதிகம்
கலிஃபோர்னியாவில்
அதிகப்படியான அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் காட்சிகள் அதிகளவில் பதிவு
செய்யப்பட்டுள்ளதால், இங்கு ஏலியன் தளம் அமைந்திருப்பதை மக்கள் அதிகம்
நம்புகின்றனர்.
கலிஃபோர்னியா
லஸென்
மலைப்பகுதியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேன்டென் பகுதி வாசிகள் லஸென் மலையில் ஏலியன் தளம் இயங்கி வருவதை
அறிந்திருக்கின்றனர்.
சோதனை
இந்த மலைப்பகுதியில் ஏலியன் சார்ந்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் நம்பப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.
நியூ மெக்சிகோ
நியூ
மெக்சிகோவில் அமைந்திருக்கும் டல்ஸ் போஸ் ஏலியன் தளம் சற்றே பிரபலமானது
என்றும் கூறலாம். இந்த நிலத்தடி ஏலியன் தளத்தில் பல்வேறு பிரிவுகளில்
அதிபயங்கர ஆய்வு மற்றும் சோதனைகள் நடைபெற்று வருவதாக நம்பப்படுகின்றது.
எண்ணிக்கை
கிட்டத்தட்ட 18,000க்கும் அதிகமான ஏலியன்கள் இந்த தளத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ராணுவ தளம்
ரகசிய ராணுவ
விமான சோதனை தளமாக அறியப்படும் பகுதியாக இருந்தாலும் இங்கு ஏலியன் சார்ந்த
சோதனைகள் நடைபெறுவதாக அதிகம் நம்பப்படுகின்றது.
நெவாடா
தெற்கு நெவாடா
பகுதியில் அமைந்திருக்கும் ஏரியா 51 பகுதி சார்ந்த குழப்பங்கள் தொடர்ந்து
நீடிக்கும் ஒன்று தான். ஆனால் மக்கள் இங்கு ஏலியன் தளம் உள்ளது என்றும்
இங்கு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் காணப்பட்டதாகவும்
கூறப்படுகின்றது.
கருத்துரையிடுக Facebook Disqus