0
சர்வதேச விண்வெளி மையமானது 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் நிறுவப்பட்டது. விண்வெளியில் இயங்கும் நுண்ஈர்ப்பு ஆய்வகமாக சர்வதேச விண்வெளி மையம் இருக்கின்றது. இதில் ஆறு பேர் கொண்ட சர்வதேச குழு வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் நொடிக்கு ஐந்து மைல் வேகத்தில் பூமியை ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் சுற்றி வருகின்றனர்.

இதுவரை இணையம் மற்றும் செய்தி வடிவில் புகைப்படம் மற்றும் வீடியோ மூலம் சர்வதேச விண்வெளி மையத்தை பார்த்து வந்த நமக்கு இதனினை நேரில் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சர்வதேச விண்வெளி மையத்தினை நேரில் பார்ப்பது எப்படி


விண்வெளி 

பூமியில் இருந்து சுமார் 400 கிமீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையமானது நாள் ஒன்றைக்கு 15.54 முறை வட்ட பாதையில் சுற்றி வரும்.

துவக்கம்

2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முதல் 18 நாடுகளை சேர்ந்த சுமார் 222 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். 

ஆய்வு 

இக்குழுவினர் பூமியை தவிற விண்வெளியில் மற்ற கிரகங்கள் இருப்பது குறித்த ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 


நேரம்

அதன்படி வாரத்திற்கு சுமார் 35 மணி நேரம் இந்த ஆய்வு பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். 

நாசா 

சர்வதேச விண்வெளி மையத்தினை இந்தியர்கள் நேரில் பார்க்க ஏதுவாக இணையதளம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளத்தை பயன்படுத்தி சர்வதேச விண்வெளி மைத்தை நேரில் பார்க்கும் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். 

Vh04OWj.jpg

முகவரி 

அதன் படி  https://spotthestation.nasa.gov/  இணையதள முகவரிக்கு சென்று மற்ற தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

நேரம் 

முன்பு குறிப்பிட்ட இணையதளத்திற்கு சென்று நாடு மற்றும் இடத்தை பதிவு செய்தால், சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களில் பார்க்கும் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். 

தேதி

சர்வதேச விண்வெளி மையத்தினை மே மாதம் 11 ஆம் தேதி வரை நேரில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top