0
"என்னங்க" என்பதில் பிற்போக்குத்தனம் இருப்பினும், அந்த வார்த்தை காதில் ஒலிக்கும்போது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!

பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்
பல்லி அடிக்க அழைக்கிறாள் என்று அர்த்தம்

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால்
பில்லை கட்டு என்று அர்த்தம்.


வீட்டு வாசலில் நின்று யாருடனாவது
கைகட்டி நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது

வீட்டின் உள்ளில் இருந்து ”என்னங்க” என்று உச்சஸ்தாயியில்
சத்தம் வந்தால் கையைகட்டி நின்று பேசாதே என்று அர்த்தம்.


கல்யாண வீட்டு கூட்டத்தில்
”என்னங்க” என்று சத்தம் வந்தால்
எனக்கு தெரிந்தவர் வந்திருக்கிறார்
அறிமுகபடுத்தி வைக்கிறேன் வா என்று அர்த்தம்


துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால்
அவள் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்


வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூக்கடை அவள் கண்ணில் பட்டதென்று அர்த்தம்.


மருத்துவமனை சென்று ”என்னங்க” என்று அழைத்தால்
டாக்டரிடம் என்ன பேசவேண்டும் என்று கேட்கிறாள்
என்று அர்த்தம்.


வெளியே எட்டி பார்த்தவண்ணம் ”என்னங்க” என்று
அழைத்தால் யாரோ அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.


பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பர்ஸுக்கு வேட்டு வைக்கிறாள் என்று அர்த்தம்.


சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ……..


இன்னும் உண்டு நிறைய ”என்னங்க” உள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top