0
ஒருவேளை விண்வெளிக்கு எல்லை இருக்கலாம். ஆனால், இறுதிவரை நம்மால் அதை கண்டுப்பிடிக்கவே முடியாது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் டார்க் மேட்டர் (Dark matter) அதாவது அண்டத்தின் 73% நிரப்பி கிடக்கும் 'என்னேவென்றே அறியப்பட முடியாத' கரும்பொருள்...! 

சில விண்வெளி மர்மங்கள் வெளித்தோற்றத்தில் எளியது போல் தோன்றினாலும் கூட அவைகள் எல்லாம் வெறும் வானியல் அவதானிப்புகள் மூலம் தீர்க்கப்பட முடியாதவைகள் என்பது தான் நிதர்சனம். டார்க் மேட்டரையும் சேர்த்து கண்டுபிடிக்கவே முடியாத மிகவும் சிக்கலான 8 விண்வெளி மர்மங்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டு உள்ளனர். அதை பற்றிய தொகுப்பே இது..!

AnZ8DPD.jpg

டார்க் எனர்ஜி (Dark Energy) :

நாம் வாழும் பிரபஞ்சத்தின் கணிதத்திற்கு சமநிலையை வழங்க கூடிய சக்தியாக திகழும் டார்க் எனர்ஜி ஆனது எம்மாதிரியான ஒன்று என்பது இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை..! 

51SMSac.jpg

டார்க் மேட்டர் :

டார்க் எனர்ஜியுடன் கிட்டத்தட்ட இணைப்பில் உள்ள விண்வெளி புதிர் தான் டார்க் மேட்டர் (Dark Matter) - இதை பிரபஞ்சதில் உள்ள அனைத்தையும் ஒன்றாக இணைத்துப் பிடித்துள்ள 'பசை' என்று கூறலாம். 

pzLoUQF.jpg

பார்யோன்ஸ் :

பிரபஞ்சத்தில் டார்க் எனர்ஜி மற்றும் டார்க் மேட்டரின் பங்களிப்பு போக மீதமுள்ள அசாதாரண பொருளாக கருதப்படும் ஒன்று தான் - பார்யோன்ஸ் (Baryons). அப்படியான, பார்யோன்ஸ் பிரபஞ்சத்தின் எப்பெரும் பகுதியை கைக்கொண்டுள்ளது என்பதும் தீராத மர்மம் தான்..! 

EC403MF.jpg

நட்சத்திர வெடிப்பு :

நட்சத்திரங்களும், சூரிய குடும்பமும் எப்படி உருவானது என்பதை பற்றிய தெளிவை நாம் பெற்றுவிட்டோம் என்கிற போதிலும் ஒரு சூப்பர்நோவாவாக (Supernova) உருவாகும் முன்பு நட்சத்திரம் ஆனது ஏன் வெடிக்கின்றது என்பதை பற்றிய தெளிவு இந்நாள் வரை கிடையாது ..! 

UDKe1wx.jpg

பிரபஞ்சத்தின் அயனியாக்கம் :

அண்டத்தின் உருவாக்கமான பிக் பாங்க் நிகழ்வு நடந்து சுமார் நூறாயிரம் ஆண்டுகளுக்கு எலக்ட்ரான்கள் அணுக்களில் இருந்து நீங்கி வெளியேறியது. அது ஏன் என்பது பற்றிய சிறிய அளவு தெளிவு கூட இல்லை..!

Vx05UHc.jpg

காஸ்மிக் கதிர் :

விண்வெளியின் மாபெரும் சக்திகளில் ஒன்றான காஸ்மிக் கதிர்களின் மூலம் எது?, காஸ்மிக் கதிர்களின் சக்திக்கான காரணம் என்ன என்பது இன்றுவரையிலாக நீங்காத மர்மம் தான்..! 

ItVzndK.jpg

சூரிய குடும்பம் :

நமது சூரிய குடும்பம் மிகவும் வித்தியாசமாக இருப்பதால் அது முறையான விண்வெளி வழிமுறைகளின் கீழ் தான் உருவாகி இருக்கிறதா.?? அல்லது கிடைக்கபெற்ற குழப்பமான வாய்ப்புகளுக்கு உள்ளாகி உருவானதா என்பது கேள்விகுறி தான்..!

zgvnTOI.jpg

கொரோனா :

கொரோனா என்பது சூரியனின் உட்கருவில் இருந்து அதிகபட்ச தொலைவான மேல் அடுக்கு ஆகும். இருப்பினும் அந்த அடுக்கு ஏன் இவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்பது இன்று வரை மர்மம் தான்..!

கருத்துரையிடுக Disqus

 
Top