ஹிட்லரின்
படைகள் ஸ்டாலின்கிராட் மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற வெகு தொலைவில் உள்ள
பிரதேச போர் முனைகளில் எதிரிகளை நொறுக்கித்தள்ளி கொண்டிருக்கும் அதே சமயம்,
மென்மேலும் போர் களங்களை வெற்றிகரமாய் கைப்பற்ற உதவும் 'வார்-வின்னிங்
சூப்பர் வெப்பன்'களை (war-winning super-weapon) அதிகம் உருவாக்க
உத்தரவிட்டார் ஹிட்லர்..!
அதாவது, வி2
ராக்கெட்டுகள் மற்றும் முதல் தலைமுறை ஜெட் போர் விமானங்கள் போன்ற அதிநவீன
ஆயுதங்களில் ஹிட்லரின் மிகவும் ரகசிய ஆயுதமான ப்ளையிங் சாசர் மிகவும்
மர்மமான ஒரு விடயமாகவே இன்றுவரை நீடிக்கிறது. ப்ளையிங் சாசர் - நிஜமாகவே
உருவாக்கம் பெற்றதா அல்லது ஒரு கட்டுக்கதையா என்ற குழப்பத்திற்கு தற்போது
பதில் கிடைத்துள்ளது.!
குண்டு வீச :
லண்டன் மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்களில் குண்டு வீசுவதற்காக, ஜெர்மனியானது பறக்கும் சாசரை வடிவமைக்க திட்டமிட்டது.
ப்ளையிங் சாசர் :
அப்படியாக,
மணி-வடிவ பறக்கும் பொருளாக, அதாவது ஏலியன்களின் பறக்கும் தட்டு
போலிருக்கும் வடிவமைப்பில் ப்ளையிங் சாசர் ஆனது நாஜிக்களால்
உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
யூஎப்ஒ :
முன்னாள்
போலாந்து பத்திரிகையாளர் ஒருவர் ஜெர்மானியர்கள் யூஎப்ஒ எனப்படும் பறக்கும்
தட்டு ஒன்றை உருவாக்குகின்றனர் என்று கூறி கோட்பாடு உருவாக்கியுள்ளார்.
முன்மாதிரி :
இதுதான் ஜெர்மன் யுஎஃப்ஒ-வின் முன்மாதிரி (Prototype of a German UFO) என்று இன்டர்நெட்டில் வெளியாகி வைரல் ஆன புகைப்படம்..!
பறக்கவிடப்பட்டு இருக்கலாம் :
அதனை தொடர்ந்து
ஹிட்லரின் நாஸி விஞ்ஞானிகள் மூலம் ப்ளையிங் சாசர் விமான வகையானது
உண்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் மிகவும் அதிநவீன ஆயுதமான இது
பறக்கவிடப்பட்டு இருக்கலாம் என்றும் கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
நிரூபிக்கும் ஆதாரங்கள் :
இந்த ப்ளையிங் சாசர் ரகசிய திட்டமானது நிகழ்ந்துள்ளது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களும் இருக்கின்றன.
சாட்சிகள் :
அந்த
ஆதாரங்களில் குறிப்பாக, 1944-ல் தேம்ஸ் மீது மிகவும் குறைவான உயரத்தில்
ஜெர்மன் இராணுவத்தின் இரும்பு கிராஸ் குறியீடு கொண்ட ஒரு பறக்கும் தட்டை
பார்த்ததாய் சாட்சிகள் உள்ளன.
செய்தி கட்டுரை :
அது
மட்டுமின்றி அப்போது வெளியான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் 'மர்மமான
பறக்கும் தட்டு' சார்ந்த செய்தி கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.
மர்மமான கருவி :
அக்கட்டுரையுடன்
சேர்த்து நகரத்தின் மிக உயரமான கட்டங்களுக்கு மேல மிகவும் வேகமாக (high
speed) பறக்கும் மர்மமான கருவியின் புகைப்படமும் வெளியானது.
அமெரிக்கர்கள் :
மேலும்
"ஜெர்மானிய பறக்கும் தட்டு ஆயுதமாக ப்ளையிங் சாசர் என்பது நிச்சயமாக
இருக்கிறது என்று அமெரிக்கர்கள் அதிகம் நம்புகிறார்கள்" என்றும் அக்கட்டுரை
குறிப்பிடுகின்றது.
தரவு :
உடன், ப்ளையிங்
சாசர் உருவாக்கம் பற்றிய பெரும்பாலான தரவுகளை (Paper works)
ஜெர்மானியர்கள் அழித்துவிட்டனர் என்றும் அக்கட்டுரை தெரிவித்துள்ளது.
கனடா ஆய்வாளர்கள் :
இருப்பினும்
கூட 1960-களில் கனடா நாட்டின் பறக்கும் தட்டு ஆய்வாளர்கள் ஜெர்மனியின்
ப்ளையிங் சாசர் போன்றே ஒரு பறக்கும் ஆயுதத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் அது
பறந்ததா என்பது பற்றிய ஆதரங்கள் இல்லை.
பணி :
ஜெர்மனியின்
பறக்கும் சாசர் திட்டத்தில் ருடோல்ப் ஸ்க்ரீவர் (Rudolf Schriever) என்பவர்
எஞ்சினீயர் மற்றும் டெஸ்ட் பைலட்டாகவும்,ஓட்டோ ஹபர்மோல் (Otto Habermohl)
என்பவர் மற்றொரு எஞ்சினீயராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஸ்க்ரீவர் - ஹபர்மோல் :
அதனாலேயே
பறக்கும் சாசர் திட்டமானது ஸ்க்ரீவர் - ஹபர்மோல் (Schriever-Habermohl
scheme) என்ற பெயரின் கீழ் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ராக் :
1941 - 1943
ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் நடத்தப்பட்ட இந்த ப்ராஜக்ட் ஆனது ப்ராக்கை
(Prague) மையமாக கொண்டு இயங்கியது தெரியவந்துள்ளது.
நேச நட்டு கைதிகள் சாட்சியம் :
சுமார் ஆறு
கெஜம் அளவில் உள்ள வெள்ளி நிற பறக்கும் சாசரை பல்வேறு காலகட்டங்களில்
பலமுறை பார்த்துள்ளதாக நேச நட்டு கைதிகள் சாட்சியம் தெரிவித்துள்ளதும்
ப்ளையிங் சாசருக்கான பெரிய ஆதாரம் ஆகும்.
15 முன்மாதிரிகள் :
ப்ளையிங் சாசர்
வடிவமைப்பு ப்ராஜக்டில் சுமார் 15 முன்மாதிரிகள் உருவாக்கப்பட்டன
என்கிறார் இத்திட்டத்தின் கீழ் பணியாற்றிய மற்றொரு எஞ்சினீயர் ஆன ஜோசப்
ஆன்ட்ரியாஸ் எப்.
ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் :
உண்மையில்
ப்ளையிங் சாசர் என்று ஒன்று கிடையவே கிடையாது பிஎம்எக்ஸ்எம்7இ
மெஸ்ஸர்ஸ்ஷிமிட் 262 ஜெர்மன் லஃப்ட்வேஃப் விமானம் தான் (BMXM7E
Messerschmitt 262 German Luftwaffe plane) என்றும் பலரால் நமப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி :
போருக்கு
பின்பு பல ஜெர்மானிய விஞ்ஞானிகள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி
திட்டங்களுக்கு உதவி புரிந்தனர் என்பதும், ப்ளையிங் சாசர் உருவாக்கம் என்ற
கோட்பாட்டை உருவாக்கியது முன்னாள் போலாந்து பத்திரிகையாளரான இகோர்
விட்கவ்ஸ்கி (Igor Witkowski) என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus