போன் இல்லாமல் இன்று யாராலும் இருக்க முடியாது. எங்கு சென்றாலும் மற்றவைகளை விட போன் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக எல்லோராலும் கருதப்படுகின்றது. இதனை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கருவி தான் ஃப்ளேம்ஸ்டோர். நீரும் நெருப்பும் கொண்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சார்ஜ் செய்யும் இந்த கருவி குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்..
வீடியோ
நீர் & நெருப்பு
140 மில்லி நீர் மற்றும் நெருப்பு இருந்தால் போதும் இந்த கருவியை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் கருவிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
யுஎஸ்பி
இந்த கருவியின்
சார்ஜர் யுஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று பயன்படுத்தப்படும்
சார்ஜர்களை விட வேகம் குறைவாக சார்ஜ் ஆனாலும் அவசர காலத்தில் எளிமையாக
சார்ஜ் செய்ய இது உதவியாக இருக்கும்.
நேரம்
ஃப்ளேம்ஸ்டோவர் மூலம் 20 நிமிடம் சார்ஜ் செய்தால் 40 நிமிட டாக்டைம் பெற முடியும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனை
தற்சமயம் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், விரைவில் இந்த கருவி விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துரையிடுக Facebook Disqus