விஞ்ஞானிகள்
குழு ஒன்று, எக்ஸ்டிராடெரஸ்ட்ரியல் பிளானட்டில் (பூமி அல்லாத வேறு கிரகம்)
ஏற்பட்டுள்ள சுனாமியின் முதல் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது..!
ஒருவேளை அந்த நிலப்பரப்பின் பேரழிவிற்கு சுனாமி காரணமாக இருக்கலாம். எகிப்தின் மாபெரும் பிரமிட் ஆன கிசாவை விட உயரமான கடல் அலைகள் அங்கு எழுந்துள்ளது. அந்த சுனாமியை பூமி கிரகத்தில் ஏற்படும் சுனாமிகளுடன் விஞ்ஞானிகள் ஒப்பீடு செய்கின்றன..!
ஒருவேளை அந்த நிலப்பரப்பின் பேரழிவிற்கு சுனாமி காரணமாக இருக்கலாம். எகிப்தின் மாபெரும் பிரமிட் ஆன கிசாவை விட உயரமான கடல் அலைகள் அங்கு எழுந்துள்ளது. அந்த சுனாமியை பூமி கிரகத்தில் ஏற்படும் சுனாமிகளுடன் விஞ்ஞானிகள் ஒப்பீடு செய்கின்றன..!
நிலப்பேரழிவு :
மாபெரும் நிலப்பேரழிவை ஏற்படுத்திய அந்த மெகா சுனாமிகள் ஆனது, நம்ப முடியாத வண்ணம் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்டுள்ளன.
ஆதாரம் :
பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் பெரிய அளவிலான சுனாமி வெளிப்படுத்தப்பட்ட ஆதாரம் உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
வானியல் மற்றும் புவியியல் குழு :
டஸ்கன் கிரக அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த ஜெ அலெக்சிஸ் ரோட்ரிக்ஸ் தலைமையில் கீழ் ஆய்வு மேற்கொண்ட வானியல் மற்றும் புவியியல் குழுவானது இந்த கண்டுப்பிடிப்பை நிகழ்த்தியுள்து.
மெகா சுனாமிகள் :
சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தனித்தனி மெகா சுனாமிகள் சிவப்பு கிரகத்தின் நிலப்பகுதி முழுவதையும் கிழித்து எரிந்துள்ளது என்கிறார் ரோட்ரிக்ஸ்.
முதல் நுண்ணுயிர் ஜீவராசிகள் :
செவ்வாய்
கிரகம் 1.1 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்துள்ளபோது இது
நிகழ்ந்துள்ளது. அதாவது, பூமி கிரகத்தின் முதல் நுண்ணுயிர் ஜீவராசிகள்
உருவாகிய அதே தருணம்.
உயரம் :
இரண்டு
சுனாமிகளின் அலைகளும் கரையில் சராசரியாக 150 அடி உயரதிற்கு
உருவாக்கப்பட்டுள்ளது, மற்றும் சில அலைகள் முற்றிலும் அசுரத்தனமாக 400 அடி
உயரம் வரை எழுந்துள்ளன.
தாக்கம் :
இந்த
சுனாமிகள் கிளம்ப செவ்வாயின் பண்டைய நீர் கடலில் விழுந்து நொறுங்கிய
விண்கற்களின் தாக்கமாக இருக்கலாம் என்றும் அந்த விண்கற்கள் சுமார் 19 மைல்
விட்டம் அளவிலான பெரும் பள்ளங்களை உருவாக்கியுள்ளது என்றும்
கண்டறியப்பட்டுள்ளது.
பூமி போலவே :
பூமியில்
சுனாமி ஏற்படுத்தும் பாதிப்பை போலவே, செவ்வாய் சுனாமிகள் வண்டல்,
கற்பாறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான நிலவியல் அம்சங்களை துவம்சம்
செய்துள்ளது.
நிலவியல் கைரேகைகள் :
சுமார்
3.4 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாயில் ஏற்பட்ட சுனாமிகளின்
பாதிப்பு மற்றும் அத்தகைய நிலவியல் கைரேகைகள் தற்போது எளிதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரேபியா டெர்ரா :
செவ்வாய்
கிரகத்தின் குறிப்பிட்ட இரண்டு பகுதிகளில் (க்ரைச்ஸ் ப்ளானிஷியா மற்றும்
அரேபியா டெர்ரா) அதிக அளவிலான தண்ணீர் தடங்கள் மற்றும் பண்டைய கடல் கடலோர
பகுதிகள் இருந்துள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன.
தடை :
இரண்டாவாதாக
ஏற்பட்டுள்ள சுனாமி யானது முதல் சுனாமியை போல செவ்வாய் முழுக்க படர்ந்து
தாக்கி அழிக்கவில்லை என்றும் என்றும் செவ்வாய் கிரகத்தின் மிருதுவான
மேற்பரப்பானது, முதல் சுனாமி அலைகளை தடைகளில்லாமல் செவ்வாய் முழுக்க
பயணிக்க அனுமதித்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
மதிப்பீடு :
கருத்துரையிடுக Facebook Disqus