வேற்றுகிரக
வாசம் இருப்பது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது
சகஜம் என்றாகிவிட்டது. பெரும்பாலும் இவை அதிகாரப்பூர்வ தகவல் இருப்பதில்லை
என்பதால் இது குறித்து யாரும் அதிக கவலை கொண்டதில்லை.
எனினும்
உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் வேற்றுகிரக வாசிகள்
இருப்பது உண்மை என்பதை விளக்கும் சான்றுகளை பலமுறை வெளியிட்டு
இருக்கின்றனர். இன்றும் பல்வேறு காரணங்களால் இவை குறித்த தகவல் மர்மம்
நிறைந்த ஒன்றாகவே இருக்கின்றது.
தகவல்
நிலைமை இப்படி
இருக்க வேற்றுகிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றனர் என்ற வாக்கில் பல நாசா
ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாசா
பல்வேறு நாசா
ஊழியர்களும் ஏலியன் இருப்பதை உறுதி செய்து வரும் நிலையில் நாசா
அதிகாரப்பூர்வமாக இத்தகவலை உறுதி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிர்ச்சி
இந்நிலையில்
உலகெங்கும் இருக்கும் சதியாலோசனை கோட்பாட்டாளர்களையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தும் விதமாக நாசாவின் தலைமை ஆராய்ச்சியாளர் எல்லென் ஸ்டோஃபன்
அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தகவல்
ஏலியன்
இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த ஆண்டு வாக்கில்
வெளியிடப்படலாம் என வேற்றுகிரக வாசம் சார்ந்த சதியாலோசனை கோட்பாட்டாளர்கள்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உண்மை
இதனிடையே ஸ்டோஃபன் அறிக்கையானது ஏலியன் இருப்பதை மறைமுகமாக உணர்த்துவதாகவே அமைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரம்
நம் வாழ்நாள் நிறைவடையும் முன் நமது பிரபஞ்சத்தில் வேற்றுகிரக வாசம் இருப்பதை புரிந்து கொள்வோம் என ஸ்டோஃபன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை
இத்தகவல் ஆனது
பூமியை தவிர இருக்கும் மற்ற கிரகங்களில் வேற்றுகிரக வாசம் இருப்பது
நிச்சயம் உண்மை என்பதில் அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதை
உணர்த்துவதாகவே இருக்கின்றது.
வீரர்
அப்போலோ 14
திட்டத்தின் மூலம் விண்வெளி சென்ற வீரர் தன் பேட்டியில் ஏலியன் இருப்பது
உண்மை என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்
இதோடு
வேற்றுகரக வாசிகள் இருப்பது குறித்த தகவல்கள் பலமுறை வெளியாகியுள்ளதோடு,
அரசாங்கம் மற்றும் நாசா இணைந்து ஏலியன் இருப்பதை மறைக்கின்றன என்ற
குற்றச்சாட்டும் பரவலாக நிலவுகின்றது.
ஆதாரம்
முன்னதாக 2011
ஆம் ஆண்டில் நாசா அதிகாரியான சார்லஸ் போல்டன் ஏலியன் இருப்பதை தான்
நம்புவதாகவும், ஆனால் இதற்கு தன்னிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது என்று
தெரிவித்திருந்தார்.
முரண்பாடு
போல்டன்
கருத்திற்கு முன்னிலும் வித்தியாசமாக டாக்டர் மிட்செல் கருத்து அமைந்தது.
டாக்டர் மிட்செல் கூறியதாவது, 'உலகில் ஏலியன் இருப்பதை மறைக்க நாசா எது
வேண்டுமானாலும் செய்யும்' என தெரிவித்திருந்தார்.
கென் ஜான்ஸ்டன்
கென்
ஜான்ஸ்டனும் ஏலியன் மற்றும் யுஎஃப்ஒ இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட
மாட்டேன் என கூறினார், இத்தகவல் வெளியானதும் அவர் தனது வேலையில் இருந்து
நீக்கப்பட்டார்.
விண்வெளி மையம்
சர்வதேச
விண்வெளி மையத்தின் நேரலை கேமராவில் இருந்து அடையாளம் தெரியாத பறக்கும்
பொருள் தெரிவதை பலமுறை மறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கூட ஒரு முறை
அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் சில வினாடிகள் காணப்பட்டது, எனினும்
இதுவும் வேண்டுமென்றே மறைக்கப்பட்டது.
யுஎஃப்ஒ
சர்வதேச
விண்வெளி மையம் இல்லாமல் உலகின் பல பகுதிகளில் யுஎஃப்ஒ காணப்பட்டது பதிவு
செய்யப்பட்ட நிலையிலும் இது குறித்த தகவல்கள் எதுவும் உறுதி
செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக Facebook Disqus