0

தற்போதைய ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் பல பிரச்சனைகள் உடலைத் தாக்குகின்றன. அதில் ஒன்று தைராய்டு. இந்த தைராய்டில் இரு வகைகள் உள்ளன. அதில் ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு. அதில் ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

பொதுவாக ஹைப்போ தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று தான் கேட்பார்கள். ஆனால் ஒருசிலர் தான் எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்பார்கள்.

இங்கு மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான தீப்ஷிகா அகர்வால், ஹைப்போ தைராய்டின் அறிகுறிகளையும், இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத சில உணவுகளைப் பற்றியும் கூறியுள்ளார்.


* உடல் பருமன்* வீங்கிய முகம்* சரும வறட்சி* மலச்சிக்கல்* தசை மற்றும் மூட்டு வலிகள்* உயர் கொலஸ்ட்ரால்* மிகுதியான சோர்வு
ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் இந்த காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த காய்கறிகள் அயோடின் உறிஞ்சுவதைப் பாதித்து, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும்.
பச்சை வெங்காயம் தைராய்டு ஹைர்மோன்களின் உற்பத்தியைத் தூண்டும். எனவே ஹைப்போ தைராய்டு இருப்பவர்கள், பச்சை வெங்காயத்தை எப்போதும் சாப்பிடவேக் கூடாது.
பொதுவாக அனைவரும் காலையில் எழுந்தமும் புத்துணர்ச்சிப் பெற ஒரு கப் காபி குடிப்போம். ஆனால் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள், காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைன், உடலால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாமல் தடுக்கும்.
ஹைப்போ-தைராய்டு உள்ளவர்களுக்கு பொதுவான அறிகுறியே உடல் பருமன். இந்நேரத்தில் கொழுப்புமிக்க உணவுப் பொருட்களை உட்கொண்டால், நிலைமை இன்னும் மோசமாகும். எனவே கொழுப்பு நிறைந்த உணவுகளை அறவேத் தவிர்க்க வேண்டும்.
இனிப்புமிக்க உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், அது உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து, உடல் பருமனை அதிகரிக்கும். எனவே ஹைப்போ தைராய்டு கொண்டவர்கள், இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. மேலும் இனிப்பு உணவுப் பொருட்களில் கலோரிகள் அதிகம் இருப்பதால், உடல் பருமன் இன்னும் அதிகரிக்கச் செய்யும். எனவே கவனமாக இருங்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top