தமிழ் நாடு முழுவதும் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. நம்ம ஊர்களில்
வெயில் காலங்களிலேயே மின்சாரம் சரியாக வழங்கப்படுவதில்லை. தொடர்ச்சியாக
மழை பொழிந்து வரும் வேலையில் அவசரமாக வெளியே செல்லும் முன் மொபைல் போனினை
சார்ஜ் செய்ய முற்படும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நிலைமை சிக்கல்
தான்.
எனினும்
நமக்கு எவ்வித கவலையும் இல்லை, கரண்ட் இருந்தாலும், இல்லை என்றாலும்
மொபைல் போனினை சார்ஜ் செய்ய பவர் பேங்க், லேப்டாப் என பல வழிகள்
இருக்கின்றது என்கின்றீர்களா?
இந்த கருவிகளுக்கும் அதனுள் சார்ஜ் இருந்தால் மட்டுமே மொபைல் போன் சார்ஜ் செய்ய பயன்படுத்த முடியும்.
அவசர
காலங்களிலும், தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரத்திலும் மொபைல்
போன்களுக்கு உப்பு தண்ணீர் மூலம் சார்ஜ் செய்யும் எளிய வழிமுறையை தான்
இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.
இதை
சரியாக செய்து முடிக்க வீட்டில் 10 குவளை (டம்ப்ளர்) உப்பு தண்ணீர்
இருந்தாலே போதுமானது. இதனுடன் அலுமினிய தகடுகள், செப்பு, மற்றும் யுஎஸ்பி
கேபிள் தேவைப்படும்.
முந்தைய
ஸ்லைடரில் குறிப்பிடப்பட்டிருந்தவைகளை கொண்டு வீட்டிலேயே மொபைல் போனினை
சார்ஜ் செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோவினை கீழே பார்க்கவும்.
கருத்துரையிடுக Facebook Disqus