0
*மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும். 
12-1455269707-aerial-view-of-lonar.jpg
*அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட  1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.
இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.   
12-1455269727-lonar-crater.jpg
*விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் அந்த விழும்போது ஏற்ப்பட்ட உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.
இந்த பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. 
12-1455269720-lonar-crater1.jpg
*லோனோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது.
ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான்.
12-1455269739-lonar-crater-d8-1.jpg
*பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோயில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர். 
அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோயில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தைத்திய சுதன் கோயில்:
12-1455269674-1280px-daitya-sudan-temple
*லோனார் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் தைத்திய சுதன் கோயில் அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய கோயிலாகும்.  இங்கே விஷ்ணு, துர்க்கை, சூரிய தேவன், நரசிம்மர் ஆகியோரது சிற்பங்கள் இருக்கின்றன. 
12-1455274592-800px-daitya-sudan.jpg
*கஜுராஹோ கோயிலைப் போன்றே மைதுன சிற்பங்கள் கொண்ட இக்கோயிலில் மேற்கூரை கட்டாமலேயே விடப்பட்டதா அல்லது ஏதேனும் ஒரு காரணங்களுக்காக இடித்து அளிக்கப்பட்டதா என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
லோனர்தார் கோயில்:
12-1455269682-1280px-gomukh-at-lonar.jpg
*லோனர்தார் என்னும் இக்கோயில் விண்கல் தாக்கத்தினால் மேலெழும்பிய நன்னீர் ஊற்றின் மேல் கட்டப்பட்டதாகும். இந்த ஊற்றில் வருடம் முழுக்கவும் நல்ல சுவையான நீர் வந்துகொண்டே இருக்கிறது. 
இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. 
கமலஜா கோயில்:
12-1455269757-lonar-crater-lake-temple.j
*லோனார் ஏரியின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் இக்கோயிலின் மூலவராக பார்வதி தேவியின் உருவான கமலஜா தேவி வீற்றிருக்கிறார். 
ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும் வருடாந்திர திருவிழாவிற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.  
மாருதி கோயில்:
12-1455276826-maruti-temple.jpg
*இவை தவிர லோனார் ஏரியின் அருகில் ஒன்பதடி ஆஞ்சநேயர் சிற்பம் கொண்ட சிறு கோயிலொன்றும் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சிலையானது வெறும் கல்லினால் மட்டும் செய்யப்படவில்லை என்றும் விண்கல் தாக்கத்தினால் வெளிவந்த பல அரிய உலோகங்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
இந்த சிலை அதிக காந்தத்தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
லோனார் !!
12-1455269763-lonar-crater-panorama.jpg
*கிட்டத்தட்ட 50,000 வருடத்திற்கு முன்பு உருவான இந்த இயற்கை அதிசயத்தை நேரில் சென்று காணும்போது காலச்சக்கரத்தில் பயணித்து அந்த காலத்துக்கே பின்னோக்கி போனது போன்ற உணர்வு ஏற்படும் என்றே சொல்லலாம். 
லோனார் !!
12-1455278633-6174.jpg
*சுதாகர் கஸ்தூரி என்பவர் எழுதிய தமிழின் மிகச்சிறந்த அறிவியல் புனைவு நாவலாக சொல்லப்படும் '6174' என்ற புத்தகத்தில் இந்த லோனார் ஏரியை பற்றிய சுவாரஸ்யமான விவரிப்புகள் உண்டு.  
லோனார் !!
12-1455269752-lonar-crater-lake-from-spa
*வானிலிருந்து படம்பிடிக்கப்பட்ட லோனார் ஏரியின் புகைப்படம். 
லோனார் !!
12-1455269667-640px-lonar-in-the-evening
*லோனாரில் சூரிய உதயத்தையும்,அஸ்தமன காட்சியையும் நிச்சயம் தவற விடக்கூடாது.

கருத்துரையிடுக Disqus

 
Top