0

அண்டார்டிக்கா - பூமியிலேயே மிகவும் குளிர்மையான பிரதேசமாகும். பூமியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பிரதேசத்திற்கு சூரிய வெப்பம் மிக குறைந்த அளவே வந்துசேர்கிறது, ஆண்டில் ஆறு மாதங்களுக்கு அங்கு சூரிய வெளிச்சமே இருக்காது. இதன் காரணமாகக் இந்த கண்டம் முழுவதும் ஏறக்குறையப் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது.
அண்டார்டிக்காவில் மேலோட்டமான ஆய்வு நிகழ்த்துவதே மிகவும் கடினம் என்ற பட்சத்தில், அண்டார்டிக்காவில் மிகவும் நவீனத்துவமான புராதன நாகரிகங்கள் வாழ்ந்துள்ளதாக சந்தேகம் கிளம்பி உள்ளது.

Mj0CCHd.jpg

ப்ரி ரீஸ் : 

1929-ஆம் ஆண்டு மிகவும் அதிர்சிகரமான ஒரு கண்டுப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டது. அது - ப்ரி ரீஸ் மேப் (Piri Reis Map)..!

8CizbJS.jpg

மேம்பட்ட வழிசெலுத்தல் கருவி : 

கண்டுபிடிக்கப்பட்ட வரைபடம் ஆனது துருக்கிய கடற்படையின் மிகவும் மேம்பட்ட வழிசெலுத்தல் கருவியாக செயல் பட்டுள்ளது தெளிவாக காணப்படுகிறது. 

GK6KbNF.jpg

1513 : 

சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு தொலைக்கப் பட்டு இருக்கலாம் என்று கருதப்படும் இந்த வரைபடமானது 1513 ஆம் ஆண்டு வரையப்பட்டுள்ளது. 

RaF7IC5.jpg

துல்லியமான வரைபடம் : 

பழைய ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொது அந்த காலகட்டத்தில் மிகவும் துல்லியமான வரைபடமாக இந்த மேப் திகழ்ந்துள்ளது தெரிய வருகிறது. 

8C018wb.jpg

300 ஆண்டுகளுக்கு முன்பே : 

மிகவும் துல்லியமான முறையில் அண்டார்டிக்காவின் வடக்கு ரிட்ஜ் பகுதிகளின் விரிவான வரைபடங்களை கொண்டுள்ள இந்த மேப் ஆனது அண்டார்டிக்கா கண்டம் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்படுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கம் பெற்றுள்ளது. 

iWj9l4n.jpg

சந்தேகம் : 

தற்போது செயற்கைகோள்களின் உதவியோடு வடிவமைக்கப்படும் வரைபடங்கள் போன்றே துல்லியத்தை வழங்கும் ப்ரி ரீஸ் மேப் ஆனது அண்டார்டிக்காவில் மிகவும் முன்னேறிய பண்டைய நாகரிகங்கள் வாழ்ந்துள்ளன என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளன. 

YhmqWtl.jpg

பண்டைய செயல்பாடு : 

1821-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட அண்டார்டிக்காவின் பண்டைய செயல்பாடு பற்றிய ஆதாரமாக ப்ரி ரீஸ் வரைபடம் மட்டும் இல்லை. மேலும் ஒரு வரைபட ஆதாரம் உள்ளது.

ldqaGgf.jpg

ஒரோன்சு ஃபைன் : 

1531-ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற ஒரோன்சு ஃபைன் (Oronce Fine) வரைபடமும் அண்டார்டிக்காவின் பண்டைய செயல்பாடு குறித்த விடயங்களின் சந்தேகங்களை கிளப்புகிறது. 

tk7WR1W.jpg

ஆறுகள் மற்றும் ஏரிகள் : 

மிகவும் புதிரான இந்த அண்டார்டிக்கா மேப்பில் இருக்கும் ஆறுகள் மற்றும் ஏரிகள், அவ்வாறே இருப்பது செயற்கைகோள் இமேஜிங் ( satellite imaging) மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Mjwj9M6.jpg

வரைபடவல்லுனர் : 

பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலாக அங்கு ஒரு மனித காலடி கூட பதியவில்லை என்கிற நிலையில், இந்த அளவிலான துல்லியத்தை எப்படி வரைபடவல்லுனர்களால் தெரிந்துகொண்டிருக்க முடியும் என்பது புரியாத புதிர் தான். 

Dd2EChU.jpg

பண்டைய நாகரிகத்தின் வீடு : 

இது சார்ந்த புரிதலில் "அண்டார்டிகா ஒரு பண்டைய நாகரிகத்தின் வீடு" என்று தனது கருத்தை முன்வைக்கிறார் பேராசிரியர் சார்லஸ் ஹாப்குட். 

tmbG2OD.jpg

அழிந்து போயிருக்கலாம் :

"அதன் குடிமக்கள் அங்கிருந்து தப்பி சென்றிருக்க வேண்டும் அல்லது இயற்கை பேரழிவுகள் அந்த பிரதேசத்தை 14 மில்லியன் சதுர கி.மீ ஆபத்தான பனிக்கட்டி நிலப்பரப்பாய் மாற்றியதில் அழிந்து போயிருக்கலாம்" என்கிறார் சார்லஸ். 

i9Kzpi8.jpg

புதையுண்டு கிடக்கிறது : 

அப்படி அவர்கள் அழிந்து போயிருந்தால் கடும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு கிடக்கும் அண்டார்டிக்க கண்டத்தின் அடியில் இந்த பூமி கிரகத்தின் மிகவும் முன்னேறிய பண்டைய நாகரிகங்கள் புதையுண்டு கிடக்கிறது என்பது உறுதி..!

கருத்துரையிடுக Disqus

 
Top