0

 

இந்தியாவின் தேசிய பொது வானொலியான ஆல் இந்தியா ரேடியோ (All India Radio - AIR) இன்று அதன் 80-வது நிறைவு ஆண்டை கொண்டாடுகிறது. ஆல் இந்தியா ரேடியோவானது 'ஆகாசவானி' (Akashvani) என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது வானத்தில் இருந்து வரும் குரல் (Voice from the sky) என்று பொருள்படும்.

இதெல்லாம் பெரும்பாலும் நமக்கு தெரிந்திருக்கும், இன்றுவரையிலாக பெரும்பாலான இந்திய கிராமங்கள் மற்றும் பிற இந்திய பிரதேசங்களில் மிகவும் விரும்பப்படும் வானொலி நிலையமான ஆல் இந்தியா ரேடியோ பற்றி மிகவும் அறியப்படாத சில உண்மைகளைதான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

வானொலி நிலையம் :
இந்திய அரசு ஒளிபரப்பு சேவையானது (Indian State Broadcasting Service), ஆல் இந்தியா ரேடியோவாக உருவாக சரியாக இந்த நாளில் தான் (ஜூன் 8) 1936 ஆம் ஆண்டு வானொலி நிலையம் தொடங்கப் பெற்றது..!

பெயர் உருவாக்கம் :
1936-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி இந்திய அரசு ஒலிபரப்பு சேவை ஒளிபரப்பின் முதல் கட்டுப்பாட்டாளர் ஆன சர் லியோனல் பில்டன் தான் ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரை உருவாக்கம் செய்தார்..!

முதல் புல்லட்-இன் :
ஆல் இந்தியா ரேடியோவின் முதல் (புல்லட்-இன்) அறிக்கைத் தாள் 1936-ஆம் ஆண்டு, ஜனவரி 19-ஆம் தேதி ஒளிபரப்பானது..!

முதல் தேசிய இசை நிகழ்ச்சி :
ஆல் இந்தியா ரேடியோவில் முதல் தேசிய இசை நிகழ்ச்சியானது 1952-ஆம் ஆண்டு, ஜூலை 20-ஆம் தேதி ஒளிபரப்பானது..!

விவித் பாரதி சேவை :
ஆல் இந்தியா ரேடியோவின் - நாட்டின் பெரிய பொழுதுபோக்கு நெட்வொர்க் ஆன - விவித் பாரதி சேவை (Vividh Bharti Services) ஆக்டோபர் 3-ஆம், 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

சே குவேரா :
1959-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்திருந்த சே குவேரா, கே.பி.பானுமதி உடன் ஆல் இந்தியா ரேடியோவிற்கு தனது பிரத்யேக பேட்டி ஒன்றை வழங்கினார்..!

எஃப்எம் சேவை :
ஆல் இந்தியா ரேடியோவின் முதல் எஃப்எம் சேவையானது, சென்னையில் ஜூலை 23, 1977-ல் தொடங்கியது..!

கருத்துரையிடுக Disqus

 
Top