0

 விரைவில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களது தேடல்களையும், ஆய்வுகளையும் நீருக்கு அடியில் நிகழ்த்தும் காலம் வர இருக்கிறது அதாவது உலகின் சில குறிப்பிடத்தக்க அதிசயங்கள் எல்லாம் விரைவில் நீருக்கடியில் மூழ்க இருக்கிறது. அதாவது உலகின் பெரிய கலாச்சார பாரம்பரியங்களில் சிலவற்றை நாம் இழக்கப்போகிறோம்..!


கிரீன்லாந்து, அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக்கில் உள்ள பனிப்படலங்கள் உருக உலகம் முழுவதும் கடல் மட்டங்கள் உயரும் அதன் மூலம் கடலோர சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மட்டுமின்றி உலகின் சில அதிசயங்களும் விரைவில் நிரூக்குள் மூழ்க இருக்கிறது..!

மூழ்கப்போகும் அதிசயம் #01
ஈஸ்டர் தீவில் உள்ள மோவாய் (The Moai of Easter Island)

பழமை :
2000 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த முகங்கள் ஆனது ராப்பா நூயி என்ற தீவில் குடியேறிய பொலினேஷியத் மக்களால் கட்டப்பட்டன.

காலநிலை :
இந்த கால் அமைப்பு கொண்ட தீவானது ஏற்கனவே கடல் மட்ட உயர்வு மற்றும் கடற்கரை அரிப்பு போன்ற குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறிய தீவாகி விட்டது.

நிச்சயம் :
பெரிய மற்றும் வன்முறையான கடல் அலைகள் இந்த கல் தளங்கள் மீது மோதி அவைகளை சேதப்படுத்தினால், இந்த பண்டைக்கால சிலைகள் நிச்சயம் குலைந்து போய் கடலுக்குள் மூழ்கும்.

மூழ்கப்போகும் அதிசயம் #02
சிட்னி ஒப்பேரா மாளிகை (Sydney Opera House)

கடல் மட்ட உயர்வு :
ஆஸ்திரேலியாவின் சிட்னி ஒப்பேரா ஹவுஸ் ஆனது உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் ஒரு புதிய நிலையில் இருக்கலாம். ஆனால் அது ஏற்கனவே கடல் மட்ட உயர்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பது தான் நிதர்சனம்.

ஆதரவு :
ஹவுஸ் கடல் மட்டத்திற்கு மேல் 11 அடி என்ற நிலையில் உள்ளது மற்றும் உயரும் கடல் மற்றும் அதிகரித்த உப்பு போன்றவைகளால் கட்டிடத்தின் ஆதரவு அமைப்பானது இல்லாதொழிக்கப்பட முடியும்

மூழ்கப்போகும் அதிசயம் #03
எலிபண்டா குகைகள் ( The Elephanta Caves)

தொல்பொருள் :
எலிபண்டா குகைகள் - இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்திருக்கும் எலிபெண்டா தீவில் உள்ள ஒரு முக்கிய தொல்பொருள் தளமாகும்.

வெளிப்பாடு :
இந்திய கலையின் "மிக சரியான வெளிப்பாடுகள்" என்று இவ்விடம் நம்பப்படுகிறது மற்றும் யுனெஸ்கோ- வின் ஆய்வுப்படி இங்கிருக்கும் சிற்பங்களுக்கு சுமார் 1500 வயது இருக்க வேண்டும்.

அழிவு :
இந்த குகைகள் ஏற்கனவே பருவ மழை, குப்பைகள், கிராஃபிட்டி (பொதுச் சுவற்றில் எழுதப்பட்டவை), அருகிலுள்ள தொழிற்சாலை கழிவு, மற்றும் நேரம் சார்ந்த அழிவுகுணம் போன்ற அழுத்தங்களில் உள்ளது

மூழ்கப்போகும் அதிசயம் #04
மொண்ட் செயின்ட்-மிச்செல் (Mont Saint-Michel)

சேற்று விரிகுடா :
பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள பாறை தீவில் தாங்கப்பட்ட ஒரு இடைக்கால நகரம் தான் மொன்ட் செயின்ட் -மைக்சேல். ஒரு சேற்று விரிகுடா மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2.8 டிகிரி :
வெறும் 2.8 டிகிரி வெப்பமயமாதளின் கீழ் மொன்ட் செயின்ட் மைக்சேல் நீருக்கடியில் அனுப்பி வைக்க போதுமானது கண்டறியப்பட்டுள்ளது

மூழ்கப்போகும் அதிசயம் #05
லெப்டிஸ் மேக்னா (Leptis Magna)

துறைமுகம் :
லிபியாவில் உள்ள லெப்டிஸ் மேக்னா துறைமுகமானது ரோமானிய பேரரசின் அரச ஆபரணங்கள் ஒன்றாக திகழ்ந்தது.

பழமை :
1000 ஆண்டுகள் பழமையான இந்த நகரம், உலகின் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படும் ஒரு தொல்பொருள் தளமாகும்.

கடல் மட்ட உயர்வு :
ஆனால் இந்த மதிப்பிற்குரிய துறைமுக நகரமானது வரவிருக்கும் நூற்றாண்டில் ஏற்பட இருக்கும் 3 அடி அல்லது அதற்கு மேற்பட்ட கடல் மட்ட உயர்வு காரணமாக மத்தியதரை கடலுக்குள் செல்லலாம்.

மூழ்கப்போகும் அதிசயம் #06
கொனார்க் சூரிய கோயில், இந்தியா (Sun Temple at Konark, India)

மேற்கு கடற்கரை :
இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூரிய கோயில்.

பனி தகடு சரிவு :
கடல் மட்டத்தில் இருந்து 7 அடிக்கு மேல் உள்ள கொனார்க் நகரமானது ஒரு பனி தகடு சரிவு நேர்ந்தால் நம்பமுடியாத தளத்தில் மூழ்கடிக்கப்படும்.

மூழ்கப்போகும் அதிசயம் #07
விடுதலைச் சிலை (The Statue of Liberty)

130 ஆண்டு :
சுதந்திரம் பெற்ற 100-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்சு நாடு பரிசாக வழங்கிய சுதந்திர தேவி சிலையானது 130 ஆண்டுகளாய் நியூயார்க் துறைமுகத்தில் நிற்கிறது.

சிக்கல் :
நியூயார்க் நகர கடல் மட்ட உயர்வானது வெறும் மூன்று அடி உயரமானால் கூட சுதந்திர தேவி சிலைக்கு சிக்கல் என்பது நிதர்சனம்.

இறுமாப்பு :
மேற்கண்ட உலக அதிசயங்கள் மட்டுமின்றி மனித புத்தி கூர்மை மற்றும் கலை முயற்சி மிகுந்த உலகத்தின் பல பாரம்பரிய தளங்களை மனித இனம் தனது சொந்த இறுமாப்பு காரணமாக மெல்ல மெல்ல அழித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக Disqus

 
Top