0

கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, விண்வெளியில் இருந்த விண்கற்கள் மற்றும் எரிகற்கள் தான் நமது பூமி கிரகத்தில் நாம் அனைவரும் வாசிக்க உதவும் வாழ்வாதரமான தண்ணீரை கொண்டு வந்தது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்..!

சமீபத்தில், ஒரு ஆராய்ச்சிக் குழுவினர் மிகவும் பழையமான வயதை கொண்ட ஒரு புதிரான பொருளை அண்டார்டிக்காவில் கண்டுபிடித்துள்ளனர். அதன் மூலம் பூமி கிரகத்தின் ரகசியம் ஒரு கண்டுபிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

கனிம மாணிக்கல் :
ஆராய்ச்சியாளர்கள் அண்டார்டிகாவில் உள்ள ஒரு ப்ரிசியேட்டட் யூரிலிலைட் விண்கல்லின் உள்ளிருந்து (brecciated ureilite meteorite) ஒரு சிறிய துண்டு அளவிலான கனிம மாணிக்கல்லை கண்டுப்பிடித்துள்ளனர்.

நீரேற்ற வடிவம் :
அந்த மாணிக்க கல் ஆனது சிலிக்கா நீரேற்ற வடிவம் மற்றும் அது 30 சதவீதம் தண்ணீராக உள்ளது கண்டறியப்பட்டது.

உருகிய நிலை தண்ணீர் : விண்கல் மீது இது
போன்ற ஒருவகை மாணிக்ககல் படிகங்கள் இருப்பதின் மூலம் எரிகற்களுக்கு நீர் ஆதாரம் வழங்கும் விண்கற்களில் உருகிய நிலை தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உறுதி :
இதன் மூலம்,முந்தைய காலங்களில் நம் பூமி கிரகத்தோடு மோதிய எரிகற்கள் தான் பூமிக்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

இஇடி 83309 :
ஒரு சிறுகோளின் பகுதியாக இருந்து பின் பிளந்து பூமியை அடைந்த இந்த எரிகல்லுக்கு இஇடி 83309 (EET 83309) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோட்பாடு :
இந்த ஆதாரம் ஆனது எரிகற்கள் தான் பூமிக்கு தண்ணீரை கொண்டு வந்தது என்ற கோட்பாடு மேலும் வலுப்படுத்துவதோடு உறுதியும் செய்கிறது.

மூலம் :
பிரிந்து வந்த இதுபோன்ற எரிகற்களுக்கு மூலமாக திகழும் விண்கற்கள் ஆனது மிகப் பெரிய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம் :
அதாவது சூரியனை சுற்றுப் பாதையாக கொண்டு சுழலும் விண்கற்கள் பார்க்க சிறியதாக இருப்பினும் அவைகள் சுமார் 6000 மைல்கள் ஆரம் கொண்டவைகளாக இருக்குமாம்.

தீங்கு :
மறுபக்கம் அளவில் சிறியதாக இருக்கும் விண்கற்கள் பூமியோடு எத்தனை முறை கடுமையான மோதல்கள் நிகழ்த்தினாலும் பெரும்பாலும் பூமிக்கு தீங்குகள் ஏற்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக Disqus

 
Top