கேள்வி :
*ஒரு தெருவில் 5 வீடுகள் வரிசையாக உள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறங்களில் வர்ணம் தீட்டப்பட்ட வீடுகள்.
*ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாட்டைச்சேர்ந்த நபர்கள் தனித்தனியே வசித்துவருகிறார்கள்.
*இந்த ஐந்து வீட்டவர்களும், ஒருவருக்கொருவர் வித்தியாசமான பழக்கவழக்கங்களை கொண்டவர்கள்.
அதாவது, வித்தியாசமான குடிப்பழக்கம், வித்தியாசமான புகைப்பழக்கம் மற்றும் வித்தியாசமான செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம்.
இவர்களில் யார் மீனை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்?
உதவி தகவல்கள் :
1. பிரித்தானியர் சிவப்பு வர்ண வீட்டில் வசிக்கிறார்.
2. சுவீடனியர் நாயை செல்லப்பிராணியாக வளர்க்கிறார்.
3. டென்மார்க் நாட்டவர் தேனீர் அருந்துவார்.
4. பச்சை வர்ண வீடு அடுத்ததாகவும், வெள்ளை வர்ண வீட்டிற்கு இடது புறமாகவும் உள்ளது.
5. பச்சை வர்ண வீட்டுக்காரர் கோப்பி அருந்துவார்.
6. “Pall Mall” வகை சிகரெட்டை புகைப்பவர் செல்லப்பிராணியாக பறவைகளை வளர்க்கிறார்.
7. மஞ்சல் வர்ண வீட்டிற்கு சொந்தக்காரர் “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பார்.
8. நடுவீட்டில் இருப்பவர் பால் குடிப்பார்.
9. நோர்வேஜியன் முதலாவது வீட்டில் வசிக்கிறார்.
10. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவர் , பூணையை செல்லப்பிராணியாக வளர்ப்பவருக்கு அடுத்ததாக இருக்கிறார்.
11. குதிரையை செல்லப்பிராணியாக வளர்ப்பவர், “Dunhill” வகை சிகரெட்டை புகைப்பவருக்கு அத்ததாக இருக்கிறார்.
12. “Blue Master” வகை சிகெர்ட்டை புகைப்பவர் பியர்/பீர் (Beer) உம் அருந்துவார்.
13. ஜேர்னம்னியர் “Prince” வகை சிகரெட் புகைப்பார்.
14. நோர்வேஜியன் நீல வர்ண வீட்டிற்கு அடுத்து வசிக்கிறார்.
15. “Blends” வகை சிகரெட்டை புகைப்பவரின் அயலவர் தண்ணீர் குடிப்பவராவார்.
முயற்சியுங்கள், நிச்சயம் பதில் கிடைக்கும்!
சரியான விடையை செய்முறையுடன் கூறுங்கள்.
புதிரின் விடையும் விளக்கமும்
கருத்துரையிடுக Facebook Disqus