0

ஒருவேளை இரண்டாம் உலக யுத்தத்திற்கு வேற்றுகிரகவாசிகள் காரணமாக இருந்திருந்தாலும் கூட, அவைகளை ஹிட்லரும், நாஸி படையும் வெற்றி கொண்டிருக்கும். ஏனெனில், அவர்களுக்கு இரண்டாம் உலகப்போரை வெல்ல அதிக நேரமும், அதனைக்கொண்டு நிச்சயமான வெற்றிக்கு தேவையான ஆயுதங்களை அவர்களால் உருவாக்கவும் முடிந்தது..!

மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நாஸியின் 'வொண்டர் வெப்பன்ஸ்' என்று அழைக்கப்பட்ட ஆயுதங்களெல்லாம் கடவுள் புண்ணியத்தில் முழுமையடையவில்லை, இல்லையெனில் இரண்டாம் உலகப்போரை ஹிட்லர் வெற்றி கொண்டிருப்பார், அவர்களின் 'வொண்டர் வெப்பன்ஸ்' கொண்டு எழுதப்பட்டிருக்கும் இன்னும் மோசமான - ஒரு இரத்த வரலாறு..!

வொண்டர் வெப்பன் #10 :
ஜெட் இடைமறிப்புகள் ( Jet Interceptors)

வானத்திலே :
இந்த ஜெட் இடைமறிப்புகள் ஆனது எதிரி போர் விமானங்களை வானத்திலே வீழ்த்தி வெடிக்க செய்யும் நோக்கத்தில் உருவாக்கம் பெற இருந்தன.

வடிவமைப்பு உருவாக்கம் :
அதனை மனதிற்கொண்டு வடிவமைப்பு உருவாக்கம் பெற்றதே சூப்பர் லோரின் (Super Lorin) மற்றும் டா 283 (Ta 283) போன்ற அதிநவீன போர் விமானங்கள்.

போக்கே - வுல்ப் தொழிற்சாலை :
இவ்வகையான போர் விமானங்களை வடிவமைக்க தொடங்கிய ஜெர்மனியின் போக்கே - வுல்ப் தொழிற்சாலையானது 1945-ஆம் ஆண்டு பிரிட்டன் படையினரால் கைப்பற்றப்பட்டதால் அதிநவீன ஜெட் இடைமறிப்புகள் உருவாக்கம் பெறாமலேயே போயின.

வொண்டர் வெப்பன் #09 :
சூப்பர்கன்ஸ் (Superguns)

சூப்பர் பீரங்கிகள் :
நாஜிக்களிடம் ஏற்கனவே 29 மைல்கள் வரையிலான இலக்குகளை தாக்கும் சூப்பர் பீரங்கிகள் பொருத்திய மிகப்பெரிய ஒரு ஜோடி இரயில்கள் இருந்தது.

ஐரோப்பிய நாடுகள் :
இருப்பினும் நாஜிக்கள், பிற ஐரோப்பிய நாடுகள் வரையிலாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட சூப்பர் துப்பாக்கிகளை உருவாக்க திட்டமிட்டன.

இரயில் பாதைகள் வீழ்ச்சி:
இவ்வகையான சூப்பர் துப்பாக்கிகள் கொண்டு லண்டனை தாக்கி அழிக்க நாஜிக்கள் திட்டமிட்டுன, ஆனால் அவர்களின் இரயில் பாதைகள் வீழ்ச்சியடைந்த காரணத்தினால் அவர்களால் அதை நிகழ்த்த முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வொண்டர் வெப்பன் #08 :
விடிஓஎல் விமானங்கள் (VTOL Planes)

முறை :
விடிஓஎல் (VTOL) என்றால் வெர்ட்டிக்கல் டெக் ஆப் மற்றும் லேண்டிங் (vertical take-off/landing) அதாவது செங்குத்தாக விமானத்தை நிறுத்தவும் பறக்கவும் செய்யும் முறை.

தரையிறக்கம் :
இதுமட்டும் நாஜிக்களுக்கு சாத்தியமாகி இருந்தால் அவர்களின் விமானத்தை இறக்குவதறகு ஓடு தளம் தேவைப்பட்டு இருந்திருக்காது, அதனால் அவர்களால் எங்கு வேண்டுமானாலும் தரையிறக்கம் செய்து எதை வேண்டுமானாலும் தாக்கி அழித்திருக்கலாம்.

வொண்டர் வெப்பன் #07 :
ஜெட் பவர்டு பாமர்கள் (Jet-Powered Bombers)

இடைமறித்து :
இந்த ஜெட் பவர்டு பாமர்களை எதனாலும் இடைமறித்து தாக்கி அழிக்கவே முடியாத வண்ணம் நாஜிக்கள் வடிவமைத்தனர்..!

எண்ணிக்கை :
இந்த மிருகத்தனமான ஜெட் பவர்டு பாமர் விமானங்களை ஜெர்மனியின் அராடோ நிறுவனம் 1944-களில் மிக குறைவான எண்ணிக்கையில் தயாரித்தது.

நேரமின்மை :
உலகின் முதல் முழு செயல்பாட்டு ஜெட் பவர்டு பாமர்கள், ஐரோப்பிய நாடுகளின் ராஃப் விமானங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. நல்லவேளை நேரமின்மை காரணமாக மிக குறைந்த எண்ணிக்கையில் அவைகள் உருவாக்கம் பெற்றதால் ஒருகட்டத்தில் ஜெர்மனி வீழ்ந்தது.

வொண்டர் வெப்பன் #06 :
சப்- ஆர்பிட்டல் பாமர்கள் (Sub-Orbital Bombers)

அமெரிக்கா :
சுமார் 4000 கிலோ எடை அளவிலான வெடிப்பொருட்களை சுமந்து சென்று அமெரிக்காவை முழுமையாக தாக்கி அழிக்க திட்டமிட்டு வடிவமைப்பு உருவாக்கம் பெற்றதே இந்த சப்- ஆர்பிட்டல் பாமர்கள்.

சில்வர் பேர்ட் :
1942-ஆம் ஆண்டு 'சில்வர் பேர்ட்' என்ற பெயரின் கீழ் திட்டமிடப்பட்ட இந்த மிக கொடூரமான நாஜி ப்ராஜக்ட் ஆனது திட்டமிட்டப்படி நடக்காத நாஜி ப்ராஜக்ட் பட்டியலில் முதலாவதாக திகழ்கிறது.

வொண்டர் வெப்பன் #05 :
யூ-படகுகள் (U-Boats)

நடைமுறை :
அமெரிக்காவை தாக்கி அழிக்க மிகவும் நடைமுறைக்குள்ளான மற்றும் மலிவான திட்டங்களை ஜெர்மனி வகுத்தது அதில் ஒரு தான் யூ படகுகள்..!

உலகின் முதல் :
யூ படகுகள் தான் உலகின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சுமக்கும் நீர்மூழ்கிக் கப்பல் திட்டமாகும்..!

பரிசோதனை :
வி-2 வகை ராக்கெட்களை கொண்டு நியூயார்க் நகரை தாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரே ஒரு யூ படகும் பரிசோதனை கூட செய்து பார்க்க முடியாமல் போனது.

வொண்டர் வெப்பன் #04 :
ஸ்டில்த் பாமர் (Stealth Bomber)

துல்லியமான முறை :
அமெரிக்கா மீது திருட்டுத்தனமாக, மிகவும் துல்லியமான முறையில் வெடிகுண்டுகள் வீச கப்பல்களை விடவும், ஸ்டீல்த் விமானங்கள் தான் சிறந்தது என்று நாஜிக்கள் முடிவு செய்ய உருவானதே - ஹோ 228.

முழுமை :
மிக அதிக வேகம், ரேடாரில் சிக்காத திறன், எதிரிகளை குழப்பும் வடிவமைப்பு என உலகின் மிகச்சிறப்பானதாக உருவான ஹோ 229 ஆனது முழுமை அடையாமலேயே போனது.

வொண்டர் வெப்பன் #03 :
விண்வெளிக்குள் ஆயுதங்களை செலுத்த வல்ல ராக்கெட்கள் (Rockets That Put Weapons Into Orbit), முக்கியமாக அமெரிக்காவை தாக்கியம் நோக்கம் கொண்டவைகள், 1933-ஆம் ஆண்டு முதல் 1945-ஆம் ஆண்டு வரையிலாக இந்த ராக்கெட் வடிவமைப்பு நிகழ்த்தப்பட்டது. ஆனால், பயன்படுத்தப்படவில்லை.

வொண்டர் வெப்பன் #02 :
சூரிய துப்பாக்கி (The Sun Gun) - ஹீலியோபீம் என்றும் அழைக்கப்படும் இந்த ஆயுதமானது ஒரு முழு நகரத்தையும் சாம்பலாக்கி விட முடியும், நாஜிக்களின் கனவு ஆயுதமமான இது சாத்தியமாகவில்லை..!

வொண்டர் வெப்பன் #01 :
அணு குண்டு (Atomic bomb) - நாஜிக்கள் எவ்வளவு முயன்றும் அவர்களால் வெற்றிகரமாக அணு ஆயுதத்தை உருவாக்கம் செய்ய முடியவில்லை. ஒருவேளை அவர்கள் அதில் வெற்றி கண்டிருந்தால் பாதிக்கும் மேற்பட்ட உலகம் அழிக்கப்பட்டிருக்கும்..!

கருத்துரையிடுக Disqus

 
Top