அனுதினமும் வளர்ந்து கொண்டே போகும் அறிவியலால் கூட பிரபஞ்சத்தின் சில பழம்பெரும் புதிர்களுக்கான விடைகளையும், விளக்கத்தையும் அளிக்க இயலவில்லை என்பது தான் நிதர்சனம்..!
அப்படியாக, நாம் சிக்கிக் கொண்ட பிரபஞ்சத்தின் மிகப்பெரிய இரகசியயங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். விடைகளே கிடையாது 'அட்லீஸ்ட்' கேள்விகளையாவது தெரிந்து கொள்வோம்..!
விடை கிடைக்காத கேள்வி #01
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது..?
தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கோட்பாடு - பூமியின் மேலோடு அமைப்பையும், அதன் தொடர்புடைய - அடிப்படை கவசத்தின் மீது மெதுவாக நகரும் திடமான லித்தோஸ்பெரிக் தகடுகள் போன்ற பல நிகழ்வுகளையும் விளக்குகிறது.
இது வரையிலாக எல்லாம் தெளிவாக இருக்கிறது ஆனால், அந்த தகடுகள் நகர்வதற்கு எது காரணம் என்ன காரணாம் என்பதற்கு பதிலில்லை...!
#4
வாழ்க்கையின் ஆதாரம் எது..?
உயிர் வாழ்க்கையானது பூமியில் கிரகத்தில் தான் உருவாகின என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் ஆனால், எப்படி உருவாகினோம் என்பது தான் இங்கே கேள்வி..?
மூலக்கூறுகள் சரங்கள், அமினோ அமிலங்கள் என எல்லோரிடமும் ஒரு கோட்பாடு உள்ளது, ஆனால் நிச்சயமான பதில் யாரிடமும் இல்லை என்பது தான் நிதர்சனம்.
எது புற்றுநோயை ஏற்படுத்துகிறது..?
நீங்கள் ஆய்வு காகிதங்களையும், புத்தகங்களையும் நம்பினால் ஒருவேளை உங்களுக்கு புற்றுநோய் எதனால் விளைகிறது என்பது நீங்கள் நம்பலாம், ஆனால் உண்மையில் அதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
செல்களில் ரேண்டம் பிறழ்வுகள் ஏற்படும், அது ஒரு ரன்வே பிரதி ஏற்பட வைத்து அதன் விளைவாய் கட்டி உருவாக வழிவகுக்கும் - இப்படிதான் புற்றுநோய் உருவாகிறது, இப்படியாக, புற்றுநோய் ஏற்படுகிறது எப்படி என்பது நமக்கு தெரியும்., ஆனால், அது ஏன் உருவாகிறது என்பதற்கு விளக்கமில்லை.
நாம் ஏன் உறங்குகிறோம்..?
ஏன் உறங்குகிறோம் என்று கேட்டால் பெரும்பாலான விஞ்ஞானிகள் நாம் சோர்வாகிறோம் அதனால் தான் என்று பதில் கொடுப்பார்கள். அதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு நாம் முற்றிலும் நினைவிழந்த ஒரு மர்மமான நிலைக்குள் இருக்கிறோம் அதெப்படி என்று யோசித்தால் சோர்வு என்பதை மீறிய விடைகளை மனம் தேடும்.
உண்ணும் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது அது நம்மை விழிப்பாய் வைத்துக் கொள்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட நீங்கள் எவ்வளவு அதிகம் சாப்பிட்டாலும் கூட அது நீங்கள் காலவரையின்றி விழித்திருக்க உதவாது என்பதும் நிதர்சனமே..!
நாம் ஏன் உறக்கம் கொள்கிறோம் என்பது ஒருபக்கம் உறுதியாக தெரியப்படாவிட்டாலும் கூட மறுபக்கம் நாம் உறக்கமே கொள்ளவில்லை என்றால் மரணம் ஏற்படும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
எல்லோரும் எங்கே இருக்கிறார்கள்..?
92 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவு தான் காணக்கூடிய அண்டத்தின் அளவாகும். முடிந்த வரை விண்வெளியை அலசி பார்த்தும் கூட நம்மை போன்றே உள்ள பிற உயிரினங்கள் எங்கே இருகிறர்கள் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏன் பொருளில்லா தன்மையை விட பொருள் உள்ள தன்மை அதிகமாக இருக்கிறது..?
இதுவரை நாம் கண்டுபிடித்ததை வைத்து பார்க்கும்போது பொருள் (matter) மற்றும் எதிர்ப்பொருள் (anti-matter), சமமாக மற்றும் எதிரெதிராக இருக்கும் மற்றும் அவைகள் சந்திக்கும் போது, ஒன்று மற்றொன்றை நிர்மூலமாக்க வேண்டும்.
ஆனால், நம் அண்டத்தில் ஆன்ட்டி-மேட்டர்களை விட மேட்டர்கள் தான் அதிகமாக உள்ளது. அதெப்படி என்ற கேள்வி மட்டும் தான் நம்மிடம் உள்ளது.
ஈர்ப்புக்குள் என்னதான் இருக்கிறது.?
ஈர்ப்பு என்பது ஒரு சக்தி என்பதும், அது வேலை செய்கிறது என்பதும் உறுதி அதனால் தான் நாம் பூமியோடு பிணைப்பில் இருக்கிறோம். ஆனால், அது எப்படி உருவாகிறது ? ஏன் அது ஒரு எதிர் சக்தியாக இல்லை ? அது உண்மையில் ஒரு துகள் இருக்கிறதா ? என்பதற்கு புரிதலே இல்லை.
குவாண்டம் ஈர்ப்பு கோட்பாடு (Quantum field theory) மூலம் ஈர்ப்பு சக்தி சார்ந்த கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சி நடந்து கொண்டே தான் இருக்கிறது.
மருந்துப்போலி ஏன் வேலை செய்கிறது..?
மருந்துப்போலி அல்லது 'மருந்துக்குப் போலி' அல்லது 'ஆறுதல் மருந்து' (Placebo) அல்லது 'வெற்று மருந்து' என்பது இதன் வேறு பெயர்களாகும், உண்மையான மருந்துகளால் அல்லது மருத்துவ நடைமுறைகளால் கிடைக்கக்கூடிய பலன்களை வழங்கக்கூடிய போலியான மருந்துகள் அல்லது மருத்துவ நடவடிக்கைகளைத் தான் மருந்துபோலி எனப்படுகிறது.
மருந்துப்போலிகள் ஒரு எதிர்பார்ப்பு சக்தியை உண்டாக்கி, அதன் மூலம் ஒரு சுய நிறைவேற்றும் தீர்க்கதரிசனத்தை உருவாக்கி இது மருந்துபோலி என தெரிந்து உட்கொள்ளும் நோயாளிகளுக்கு கூட நிவராணம் கொடுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட, அதெப்படி என்பதற்கு விளக்கமே கிடையாது..!
டார்க் மேட்டர் என்றால் என்ன?
பிரபஞ்சத்தில் 85% டார்க் மேட்டர் (Dark Matter) தான் என்பது மட்டும் தான் டார்க் மேட்டர் பற்றி நாம் அறிந்து வைத்துள்ள மிகப்பெரிய விடயமாகும்.
நாம் நேரடியாக டார்க் மேட்டரை பார்க்க முடியாது என்ற போதிலும் நாம் அண்டம் முழுவதும் அதன் விளைவுகளை பார்க்க முடிகிறது. அவ்வளவு தான் அது என்ன மாதிரியானது என்ற டார்க் மேட்டரின் அடுத்தகட்டத்தை நம்மால் எட்டவே முடியவில்லை..!
நேரம் ஏன் ஒரே திசையில் பாய்கிறது..?
நேரம் இந்த வழியில் தான் இருக்க வேண்டும் பரிந்துரைக்கும் இயற்பியல் விதிகள் எதுவும் இல்லை என்கிற போதும் அப்படியாக, எதிர்காலம் மற்றும் கடத்த காலம் ஆகிய இரண்டிற்கும் ஆன நேரத்தில் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்கிற பொது நம்மால் ஏன் கடந்த காலத்தை போல வருங்காலத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது.
டைம் டிராவல் எனப்படும் காலப்பயணம் என்பது என்றாவது சாத்தியப்பட்டால் தான் இந்த கேள்விக்கு பதில் கிடைக்கும் அதுவரை இது ஒரு மர்மம் தான் !
கருத்துரையிடுக Facebook Disqus