0

ஐசக் நியூட்டன் - உலகில் உள்ள எல்லோருக்குமே பொதுவாக நன்கு அறிந்த ஒரு அறிவியலாளர். அறிவியல், கணிதம், இயந்திரவியல் துறைகளிலும், ஈர்ப்பு விசை பற்றியும் பெரிதும் ஆய்வுகள் மேற்கொண்ட நியூட்டன் அறிவியல் புரட்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..!
இயக்கம் மற்றும் ஈர்ப்பு கோட்பாடுகள், கால்குலஸ், ஒளியியல் பற்றி மிக நீளமாக ஆய்வுக் கட்டுரை, ரசவாதம் என நியூட்டனின் பல கண்டுபிடிப்புகளை நாம் அறிவோம். ஆனால், நியூட்டன் தனது இளம் கல்லூரி கால பருவத்தில் ஒரு மிக சுவாரசியமான கண்டுபிடிப்பை நிகழ்த்த முயன்றார் அதுபற்றி நம்மில் பெரும்பாலானோரும் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை..!

முயற்சி :
ஐசக் நியூட்டனின் அந்த மிக சுவாரசியமான கண்டுபிடிப்பு முயற்சியானது வேறொன்றுமில்லை - ஒரு சொந்தமான மொழி.

உலகளாவிய மொழி :
அதாவது நியூட்டன் தனது சொந்தமான அதேசமயம் உலகளாவிய மொழி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அர்த்தங்கள் :
வெளிப்படையாக இளம் நியூட்டன் உருவாக்கிய வார்த்தைகளின் அர்த்தங்கள் ஏனோதானோவென்று தான் இருந்துள்ளது என்பதை நியூட்டனே அறிந்துளளர்.

முன்னேற்றம் :
உருவாக்கப்பட்ட மொழியில் ஒழுங்கமைக்கப்பட்ட சூத்திரங்கள் அதிகம் இருந்தால் அது ஒரு பரந்த முன்னேற்றம் அடையும் என்றும் குறிப்பிட்ட சொற்களை கேட்க கேட்க அதன் பொருள் என்ன என்பதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் நியூட்டன் நம்பியுள்ளார்.

வார்த்தை :
"ஒரே வகையான பெயர்களை கொண்ட வார்த்தைகளை ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வண்ணம் இருக்க செய்ய வேண்டும்" - என்று நியூட்டன் குறிப்பெழுதியுள்ளார்.

எஸ்,டி, பி :
அதாவது - இசைக்கருவிகள் எல்லாம் 'எஸ்' என்றும், மார்பகங்கள் எல்லாம் 'டி' என்றும், உள் உணர்வுகள் எல்லாம் 'பி' என்ற எழுத்திலும் ஆர்மபிக்கட்டும் என்று அவர் மொழி உருவாக்கத்தில் குறிப்பிடுகிறார்.

கூட்டுகை :
இதன் மூலம் நியூட்டன் தனது மொழி உருவாக்கத்தில்,ஒரு வழக்கமான கூட்டுகையை பயன்படுத்தாமல் விஷயங்களை இயல்பான ஒரு முறைக்குள் வைத்து மொழி ஒன்றை உருவாக்க முயற்சித்துள்ளார் என்பது தெளிவாக புரிய வருகிறது.

நுட்பமான வேறுபாடு :
நியூட்டனின் மொழி உருவாக்க திட்டத்தில், முன்னொட்டுகள் மற்றும் முன்னொற்றுக்களின் (prefixes and suffixes) பொருள் மிகவும் நுட்பமான வேறுபாடுகளில் சுட்டிக்காட்டப்படுகிறது.

கோலஞ்சர்ஸ் :
எப்படி பார்த்தாலும் பொழுதுபோக்கிற்காக புதிய மொழிகளை கண்டுபிடிக்கும் கோலஞ்சர்ஸ் (conlangers) எனப்படுபவர்களுக்கு நியூட்டன் பல வகையில் உதவியுள்ளார் என்பதும் அவரும் ஒரு கூட்டாளி தான் என்பதும் நிதர்சனமே..!

வெற்றி :
அவ்வாறாக உருவாக்கம் பெற்ற மொழிகளில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக கருதப்படும் மொழி தான் - எஸ்பரேன்டோ (Esperanto), 1887-க்கு முன்பு உருவானது..!

கட்டமைப்பு :
பெரும்பாலும் அவ்வகையான மொழிகள் மிகவும் சிக்கலான மொழி கட்டமைப்பு கொண்டும், அறிவியல் மற்றும் கற்பனை பகுதிகள் நிறைந்த ஒன்றாகவும் தான் இருக்கின்றன.

கற்பனை மொழி :
இதுபோன்ற கற்பனை மொழிகள் வழக்கமாக ஒரு சில ஆயிரம் வார்த்தைகள் மட்டுமே கொண்டு வரையறுக்கப்பட்டிருக்கும் (எஸ்பரேன்டோ மொழியை தவிர்த்து)..!

வாழ்நாள் முயற்சி :
நியூட்டன் தனது புதிய மொழியின் வெற்றி வாய்ப்பு மிக குறைவு, மற்றும் இதுவொரு வாழ்நாள் முயற்சியாகும் என்பதை தெளிவாக உணர்ந்து தனது முயற்சியை கைவிட்டு, பெரிய கண்டுபிடிப்புகளை நோக்கி நகர்ந்தார், வெற்றியும் அடைந்தார்.

விரைவான விளக்கம் :
நியூட்டனின் சொந்த மொழி பற்றி மொழியியலாளர் அரிகா ஓக்ரெண்ட் மற்றும் படைப்பாளர் சீன் ஓ நீல் ஆகியோரின் விரைவான விளக்கத்தை காண இந்த விடியோவை பார்க்கவும்.!

கருத்துரையிடுக Disqus

 
Top