0

1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 30, ஆம் தேதி ஜெர்மனி நாட்டின் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் மரணித்ததாக இன்றைய வரலாற்றுப் புத்தகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் சைனைடு மாத்திரை உட்கொண்டு துப்பாக்கி மூலம் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து மரணித்ததாகக் கூறப்படுகின்றது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றாலும் ஹிட்லர் மரணம் குறித்த சந்தேகம் இன்றளவும் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

ஹிட்லர் மரணம் குறித்து பல்வேறு சதியாலோசனை கோட்பாடுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளையும், விளக்கங்களையும் முன் வைக்கின்றன, அவற்றில் சர்ச்சைக்குரிய சில கோட்பாடுகள் ஸ்லைடர்களில்..!

கோட்பாடு #01
ஹிட்லர் யு-கப்பல் மூலம் அண்டார்டிகா சென்றுவிட்டார்

அண்டார்டிகா
ஹிட்லர் நாஸிக்களால் கடத்தப்பட்டு அண்டார்டிகாவில் இருக்கும் ரகசிய கோட்டையில் மறைத்து வைக்கப்பட்டதாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது.

பின் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியில் 1950'களில் அணு ஆயுதம் கொண்டு ஹில்டர் வாழ்ந்ததாக அறியப்படும் ரகசிய கோட்டை தகர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறுகின்றது.

நம்பகத்தன்மை
பெரும்பாலானோரும் இந்தக் கோட்பாட்டினை நம்பினாலும், சிலர் இதை ஏற்க மறுக்கின்றனர், இவர்கள் யு-கப்பல் மூலம் அண்டார்டிகாவிற்குப் பயணம் மேற்கொள்ள முடியாது என்றும் ஜெர்மனிக்குச் சொந்தமாக அங்கு எவ்வித தளமும் இல்லை என்கின்றனர்.

கோட்பாடு #02
ஹிட்லர் அர்ஜென்டினா தப்பிச்சென்று பராகுவேவில் தங்கி இருந்தார்.

சிமோனி ரீன் கியூரெய்ரோ டயாஸ்
பிரபல எழுத்தாளரும் 'Hitler: His Life and His Death' என்ற புத்தகத்தை எழுதியவருமான சிமோனி ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் யு-கப்பல் மூலம் அர்ஜென்டினா சென்று பராகுவே எனும் சிறிய நகரில் அடால்ஃப் லெய்ப்ஸிக் எனும் பெயரில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புதையல்
இவர் குறிப்பிட்ட நகரத்தினை தேர்வு செய்து அங்குச் சென்றதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட வரைபடம் கொண்டு புதையல் ஒன்றைத் தேடியதாகவும் சிமோனியின் கோட்பாடு தெரிவிக்கின்றது.

கோட்பாடு #03
ஹிட்லர் ராக்கெட் மூலம் நிலவிற்கு சென்று விட்டார்.

காரணம்
பூமியே வெறுக்கும் மனிதர், மனிதர்களுக்கு எதிராய் பல்வேறு குற்றங்களைப் புரிந்த நபர் பூமியை விட்டு வெளியேறி வேற்றுக் கிரகத்தில் வாழ்வதைத் தவிர என்ன செய்ய முடியும் என்ற கேள்வியின் அடிப்படையில் இயற்றப்பட்டது.

வாழ்க்கை
மேலும் போர் முடிந்ததும் ஹிட்லர் நிலவுக்குச் சென்று அமைதியான வாழ்க்கையை வாழ்ந்ததாக இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது. இதைப் பறைசாற்றும் விதமாக நாஸிக்கள் ஏலியன்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோட்பாடு #04
ஹிட்லர் தன்னையே நகலி செய்து கொண்டு தென் அமெரிக்காவிற்கு சென்று விட்டார்.

தொழில்நுட்பம்
1945களில் ஜெர்மனியின் தொழில்நுட்பங்களை வைத்து இந்தக் கோட்பாடு இயற்றப்பெற்றுள்ளது. இதில் மருத்துவர். ஜோசஃப் மென்கெல் என்பவரின் உதவியோடு ஹிட்லர் தன்னை வெற்றிகரமாக நகலி செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.

நம்பிக்கை
உயிர் இயக்கவியல் முறையில் அதிக விருப்பம் கொண்ட ஹிட்லர் போரின் இறுதிக்காலங்களில் வெற்றிகரமாகத் தன்னை நகலி செய்து தென் அமெரிக்கா சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கோட்பாட்டை தழுவி நாவல் ஒன்றும் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோட்பாடு #05
ஹிட்லர் ரகசிய சுரங்கம் மூலம் தப்பிச்சென்று நிரந்திரமாக மறைந்துவிட்டார்.

தப்பித்தல்
இந்தக் கோட்பாடு ஹிட்லர் மரணிக்கவில்லை என்றும் அவர் பியூரர் பதுங்கு அறையின் கீழ் இருந்த ரகசிய சுரங்கம் வழியாகத் தப்பிச்சென்று தென் துருவத்திற்குப் பறந்து சென்றதாகக் கூறுகின்றது.

மர்மம்
ஜெர்மானியர்கள் பூமியை வெறுமையான ஒன்றாக நினைத்த காலத்தில் எழுந்த இந்தக் கோட்பாடு ஹிட்லர் தென் துருவத்தில் தன் மீதி வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறுகின்றது.

கருத்துரையிடுக Disqus

 
Top