அதுவொரு பக்கம் இருக்க மனிதன் சென்ற, மனிதனால் சாட்சிக்கு உட்படுத்தப்பட்ட கடல் பகுதிகளில் ஏற்பட்ட சில நிகழ்வுகளுக்கு எப்படி என்ற விளக்கம் இல்லை, ஏன் என்ற புரிதல் இல்லை என்பது தான் இரகசியத்துள் உள்ள இரகசியமாகும்..!
கடல் இரகசியம் #01
99 மாலுமிகளும் யுஎஸ்எஸ் ஸ்கார்ப்பியனும்..!
சுமார் 10 ஆண்டுகள் வரையிலான சேவையில் இருந்த நீர்மூழ்கி கப்பல் யுஎஸ்எஸ் ஸ்கார்ப்பியன் ஆனது வர்ஜீனியாவின் நோர்போக்கில் இருந்து புறப்பட்டு மத்திய தரைக்கடலை நோக்கி பிப்ரவரி 1968-ல் பயணிக்க தொடங்கியது.
மூன்று மாதங்கள் கழித்து, ஸ்கார்ப்பியனில் ஏதோவொரு தெரியபடாத கோளாறு ஏற்பட்டுள்ளது அதனை தொடர்ந்து அதன் சிதறிய உடைந்த பாகங்கள் மட்டும்தான் கடல் தரைமட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிர்ஷ்டமான அந்த நாளில் ஸ்கார்ப்1பியனுக்கு என்ன நேர்ந்தது, அதில் பயணித்த 99 பேர்களுக்கு என்ன நடந்தது என்பதெல்லாம் இன்று வரையிலாக புதிர்தான்.
பெர்மீஜா தீவு - நீடிக்கும் ஒரு மர்மம்..!
1970-களில், பெர்மீஜா தீவானது, மெக்ஸிக்கோவின் 200 நாட்டிகல் மைல் பொருளாதார மண்டலத்தை குறிக்கும் ஒரு இடமாக இருந்தது.
வெறும் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு சிறு தடம் கூட இல்லாத அளவு அந்த தீவானது காணாமல் போனது..!
அந்த தீவோடு சேர்ந்து அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள முக்கிய எண்ணெய்வள குறிப்புகள் ஆவணங்கள் ஆகியவையும் காணாமல் போயின என்பது குறிப்பிடத்தக்கது.
பால்டிக் கடலின் தரைப்பகுதியில் கிடந்த நீர்மூழ்கி..!
ஸ்வீடன் நாட்டு கடலின் (பால்டிக் கடல்) தரைப்பகுதியில் 'வெளிநாட்டு' மினி நீர்மூழ்கி மறைமுகமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த நீர்மூழ்கியானது எத்தனை காலமாக கடல் படுக்கையில் கிடக்கிறதுஎன்பது தெளிவாகத் தெரியவில்லை. மறுபக்கம் அதன் உடற்பகுதியில் உள்ள சிரிலிக் எழுத்துகள் மூலம் அது ரஷ்யாவிற்கு சொந்தமான தாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அதில் பயணித்த அனைவரும் உயிர் இழந்திருக்ககூடும் என்று நம்பப்படுகிறது. அந்த நீர்மூழ்கியில் எந்தவிதமான சேதமும் இல்லை, அதன் கதவுகள் எல்லாம் மூடப்பட்டுருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அலாஸ்கா வளைகுடாவின் திமிங்கலங்களின் மரணம்
2015-ஆம் ஆண்டு அலாஸ்கா வளைகுடாவில் 30 திமிங்கலங்கள் இறப்பிற்கு உள்ளாகின, பெரும்பாலும் காடீயேக் தீவுக் கூட்டத்தில் இறந்து கிடந்தன.
முதலில் இந்த பாலூட்டிகளின் இறப்பிற்கு நச்சு பாசிகள் தான் காரணமாக இருக்கும் என்று நம்பப்பட்டது. பின்பு வேறு எந்த உயிரினங்களும் இறக்கவில்லை அதனால் இந்த நிகழ்விற்கு நச்சு பாசிகள் காரணமில்லை என்பதை விஞ்ஞானிகள் விரைவில் உணர்ந்துகொண்டார்கள்.
அனைத்து திமிங்கலங்களும் ஒரே நேரத்தில் தான் இருந்துள்ளன என்பது உறுதியாக தெரிய வந்தும் கூட இறப்பிற்கு காரணம் என்பது இன்று வரையிலான கண்டுபிடிக்கப்படவில்லை.
200 ஆண்டுகால பழமையான கப்பல் விபத்து..!
2001-ஆம் ஆண்டு மெக்ஸிக்கோ வளைகுடாவில் ஒரு எண்ணெய் குழாய் கட்டமைக்கப்படும் போது, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான ஒரு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
கடல் தொல்பொருள் ஆய்வாளர்கள் குழுக்கள் இரண்டு முறை முயற்சி செய்தும் அந்த கப்பலின் எந்தவிதமான பகுதியையும் மேற்பரப்பிற்கு கொண்டு வரவே முடியவில்லை.
மூன்றாவது முயற்சியாக அனுப்பட்ட ரோபோ நீர்மூழ்கி கப்பலும் 30 நிமிடங்களில் கோளாறுக்குள்ளானது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிய அதுவொரு சாத்தான் சக்தி வாய்ந்த கப்பல் என்று தீர்மானிக்கப்பட்டது.
கருத்துரையிடுக Facebook Disqus