இத்தகை சர்ச்சைக்குரிய கேள்விக்குப் பதில் உள்ளது என்றும் இதனை விளக்கும் சில தகவல்களும் ஸ்லைடர்களில்..
ஆய்வாளர்கள்
பேய் இருப்பது குறித்து பல்வேறு ஆய்வாளர்கள், வல்லுநர்களின் கருத்துகளுக்கு அவர்களுக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர இதனை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ எவ்வித சான்று மற்றும் விளக்கம் என எதுவுமே இன்று வரை கிடைக்கப்பெறவில்லை.
இன்னும் சிலர் பேய் இருப்பதை நிரூபிக்கவே முடியாது என்றும், இல்லாத விஷயத்தை நிரூபிக்க முடியாது என்றே கூறுகின்றனர். இருந்தும் இயற்கைக்கு மாறானவற்றை நிரூபணம் செய்ய முடியாது என்ற கருத்தும் நிலவுகின்றது.
உண்மையில் பேய்கள் இருக்கின்றதா, இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அதி நவீன கருவிகளை பயன்படுத்தி பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களும் தீவிர ஆய்வில் ஈட்டுப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பேய் சார்ந்த நம்பிக்கை ஏதும் கிடையாது.
இன்று வரை தொடரும் ஆய்வுகளில் உறுதியான முடிவு எட்டப்படாத சூழல் தான் நிலவுகின்றது. எனினும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பேய் இருப்பது குறித்த முடிவு விரைவில் எட்டப்படலாம்.
பேய் இருப்பதைப் போன்று காட்சியளிக்கும் பல்வேறு புகைப்படங்கள் இணையம் முழுக்க பரவிக்கிடக்கின்றன. இதன் முக்கிய அம்சம் இவை போட்டோஷாப் அல்லது போட்டோ எடிட் செய்யும் முறைகள் கண்டறியப்படும் முன்பே எடுக்கப்பட்டவை ஆகும். இவை எடுக்கப்பட்ட நேரங்களில் குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல், படம் டெவலப் செய்த பின் அதில் மர்ம உருவம் கண்டறியப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேய் இருப்பதாகக் கூறப்படும் புகைப்படங்களில் பல்வேறு போலி படங்கள் இடம் பெற்றிருந்தாலும், சில புகைப்படங்களில் மர்ம உருவம் எவ்வாறு பதிவானது என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆய்வாளர் நெய்கெல் கீநேல் மற்றும் அவரது குழுவினர் பேய்கள் இருப்பது குறித்த தங்களது ஆய்வினை பேய் இருப்பதாக கூறப்பட்ட பழைய கட்டிடத்தில் தங்கியிருந்து துவங்கினர். ஆய்வினை துவங்கயோதோடு பேய் குறித்த கோட்பாடு ஒன்றையும் இயற்றினர்.
தங்களது கோட்பாடுகளில் மர்ம உருவங்கள் மற்றும் பேய்களை அவர்கள் ரெசிடூயல் ஹான்டிங் என்றும் இவை ஆவிகள் கிடையாது இவை மக்களுக்கு தீங்கு விளைவிக்காது என்றும் குறிப்பிட்டுள்ளனர். உண்மையான ஸ்டோன் டேப் கோட்பாட்டினை தழுவி உருவான தொலைகாட்சி நிகழ்ச்சியில் மனிதன் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் போது உடலில் இருந்து வெளிப்படும் அதீத சக்தியினை வெளியில் இருக்கும் உயிரற்ற பொருட்கள் கவர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல நரம்பியல் மனநல மருத்துவரான பீட்டர்ஃபென்விக் மனநலம் சார்ந்த பிரிவில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் ஆவார். இவர் எழுதிய தி ஆர்ட் ஆஃப் டையிங் என்ற புத்தகத்தில் நம் உடலில் இருக்கும் மூளை மற்றும் மனது இரண்டும் தனித்தனியே வேலை செய்யும், நாம் இறந்ததும் அவை இரண்டும் சம்பந்தமே இல்லாமல் பிறிந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 300க்கும் அதிகமான நோயாளிகளின் மரணிக்கும் அனுபவங்களை ஆய்வு செய்த பீட்டர் அவர்களிடம் ஒரே மாதிரியான உணர்வுகள் இருந்ததை மட்டுமே உணர்ந்தார்.
கருத்துரையிடுக Facebook Disqus