0

பிளாக் ஹோல் - மிகவும் மர்மமான திரும்பி மீளவே முடியாத, ஒற்றை வழிப்பாதையாகும். பொது சார்பியல் கோட்பாட்டின் படி, ஒரு பொருளானது பிளாக் ஹோலின் எல்லையை தாண்டும்போது - அது எதுவாக இருப்பினும் நிகழ்வெல்லை விளைவாக அது மீண்டு வெளியேற வாய்ப்பே இருக்காது.
உட்புகும் துகள் தொடங்கி ஒளி வரையிலாக எதுவாக இருப்பினும் அவைகளின் அதற்கடுத்த எதிர்காலமானது முழுக்க முழுக்க கருப்பு துளைகுள்ளேயே தான். இப்படியாக, நமக்கு பிளாக் ஹோல் சார்ந்த விடயங்கள் சற்று தெளிவே. ஆனால், வெள்ளை துளைகள் பற்றி கேட்டால், அப்படி இருக்கிறதா என்றே பதில் கேள்வி கேட்போம். அப்படித்தானே..?!

சூப்பர்நோவா :
கருந்துளைகளானது சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரங்களின் வெடிப்பில் உண்டாகின்றன.அதை சூப்பர்நோவா வெடிப்பு என்பர்.
அப்போது வெள்ளை துளைகள் என்றால் என்ன ?

வெள்ளை துளை :
வானியல் அறிஞர்கள் கணித ரீதியாக கருப்பு ஓட்டைகளை சுற்றியுள்ள சூழலை ஆராயும் போது உருவாக்கப் பெற்றதே வெள்ளை துளைகள்..!

நிகழ்வெல்லை :
வெள்ளை துளைகளின் நிகழ்வெல்லையானது கருந்துளைகளின் நிகழ்வெல்லையை காட்டிலும் வேறுபட்டது என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதனுள் விதமான பெருந்திரளும் இல்லை.

கணித கருத்து :
வெள்ளை துளைகள் முழுக்க முழுக்க ஒரு தத்துவார்த்த ரீதியிலான கணித கருத்துக்களால் உருவான ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி :
அப்படியாக, வெள்ளை துளைகள் சாத்தியமெனில் ஒருவேளை அவைகள் ஒரு கருந்துளைக்கு நேர் எதிரான பண்புகளை கொண்டிருக்குமா..? அதவாது விண்வெளி பொருட்களை உள் இழுப்பதற்கு பதிலாக வெளியே உமிழுமா..? என்ற கேள்வி எழும்புகிறது.

பூமி :
அந்த கேள்வியின்கீழ் பார்க்கும் போது நாம் கருந்துளை வெளியே இருக்கிறது அது எங்கோ போய் முடிகிறது என்றால் அதன் மறுபக்கம் தான் வெள்ளை துகள், அப்படியாக நாம் இருப்பதே வெள்ளை துகளுக்குள் தான் என்ற கருத்து மேலோங்கும்.

பிரபஞ்சம் :
அப்படியாக, வெள்ளை துளைகள் பிரபஞ்சம் தோன்றிய போது உருவாக்கம் பெற்றிருந்தால் அவைகள் நீண்ட நாட்களுக்கு முன்பே உண்டாகியிருக்க வேண்டும் ஏனெனில் நமது பிரபஞ்சம் ஏற்கனவே தவறான வவிடயங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது.

ஒருமைத்தன்மை :
இயற்பியல் மூலம் கணிக்கப்பட்ட கோட்பாட்டின் கீழ், ஒரு கருந்துளையின் ஒருமைத்தன்மையானது முடிந்த அளவு அழுத்தம் பெற்று மிகச்சிறிய அளவை பெறும். பின்னர் அது ஒரு வெள்ளை துளையாக எம்பி குதிக்கும்.

பிக் பேங் :
வெள்ளை துளையானது, பருப்பொருள் மற்றும் பெரும் ஆற்றலை வெளியிட்ட பிக் பேங் நிகழ்வில் உருவாகி இருக்கலாம் என்றும் மற்றொரு இயற்பியல் கோண விளக்கம் உள்ளது.

கணித கற்பனை :
சாத்தியமான அனைத்து வகையான வாய்ப்புகளை வைத்து பார்த்தாலும், வெள்ளை துளைகள் என்பது வெறும் கணித கற்பனை தான். அரிதான கணித யதார்த்தத்துடன் வெள்ளை துகள்கள் அடங்கப்போவதில்லை என்றும் சில வானவியலாளர்கள் கருதுகின்றனர்.

கருத்துரையிடுக Disqus

 
Top