முன்பை விட ஸ்மார்ட்போன்கள் அதிக திறன் கொண்டவைகளாக உருவாக்கப்படுகின்றன. இன்று கணினி மற்றும் லேப்டாப்களை விட வேகமாக இயங்கும் ஸ்மார்ட்போன்களும் கிடைக்கின்றன. சிப்செட் எனும் பிராசஸர் சார்ந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
பிராசஸர் சார்ந்த வளர்ச்சி ஸ்மார்ட்போன்களை வேகமாக இயக்குவதோடு, அதிக கிராஃபிக் கொண்ட கேம் மற்றும் அனிமேஷன் போன்றவைகளையும் சிரமம் இன்றி பயன்படுத்த வழி செய்கின்றது.
கோர்
பிராசஸர்களை அதிக சக்தி வாய்ந்தவைகளாக மாற்றுவதில் கோர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. இவைகள் தான் கருவியின் வேகத்தை சீராக வைக்கவும் உதவியாக இருக்கின்றன.
முதலில் குவாட்கோர் சிப்செட் கொண்ட கருவிகள் அனைவராலும் அதிகம் விரும்பப்பட்டது, இன்று ஆக்டாகோர் சிப்செட்கள் முக்கியத்துவம் பெற்று இருப்பதோடு இவை கருவிகளை வேகமாக இயங்க வழி செய்கின்றன.
முதலில் 28nm சிப்கள் பெரியதாக பார்க்கப்பட்டன, ஆனால் இன்று மேம்பட்ட வேகத்தினை 20nm சிப்செட்கள் வழங்குவதால் 28nm பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. இதோடு இன்று சில கருவிகளில் 16nm பயன்படுத்த துவங்கியுள்ளனர், இவை வேகமாக இயங்குவதோடு மின்சக்தியையும் குறைவாகவே பயன்படுத்துகின்றன.
16nm சிப்செட் 20nm சிப்செட்களை விட மெலிதாக இருக்கின்றன, இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை மெலிதானதாக வடிவமைக்கின்றனர். 16nm சிப்செட்கள் அதிக தரம் கொண்ட செயலிகளை எவ்வித சிரமமும் இன்றி இயக்குகின்றன.
ஹூவாய் ஹானர் கருவிகள் தரமான சிப்செட்களை பயன்படுத்துவதால் ஹானர் பிரான்டு கருவிகள் நல்ல விமர்சனங்களையே பெறுகின்றன. இந்நிறுவனம் தற்சமயம் 16nm சிப்செட் கொண்ட கருவியை வெளியிட இருக்கின்றது.
அதன் படி 16nm சிப்செட் மூலம் அதிவேகமாக இயங்கும் ஹானர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இம்மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளியாக இருக்கும் ஹானர் கருவியில் Kirin SoC மற்றும் 16nm தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் இந்த கருவியின் வேகம் சீராக இருப்பதோடு அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கவும் வழி செய்யும் எனலாம்.
கருத்துரையிடுக Facebook Disqus