0

ஒருபக்கம் சில பண்டைய கால கண்டுபிடிப்புகள் பல காலம் கழித்து போலியானது என்று நிரூபிக்கப்படும், மறுபக்கம் இது நிச்சயமாக போலியான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று பெரும்பாலும் நம்பப்பட்டு பின் நிஜமானது என்று கண்டறியப்படும். இவைகள் வழக்கமான தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்படும் குழப்பங்கள் தான் ஆனால், குழப்பம் உண்டாக்கும் கண்டுபிடிப்புகள் வழக்கமானதாக இருக்காது..!!

அப்படியானதொரு கண்டுபிடிப்பு தான் - நெப்ரா ஸ்கை டிஸ்க் (Nebra Sky Disc)..!


முதலில் நெப்ரா வான் வட்டு போலியானது என்றே கருதப்பட்டது. ஆனால் இப்போது, 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தொல்பொருள் கண்டுபிடிப்பாக அது கருதப்படுகிறது.
போலி :
நெப்ராவில் பழைய உலோகம் (அ) மரச்சாமான் மீது படிந்திருக்கும் பசுமையான களிம்பு மற்றும் கல் முதலியன தெரியும் படியாகப் பதித்து அழகு செய்யப்பட்ட நீலம்-பச்சை தங்க குறியீடுகள் உள்ளன.
தங்க குறியீடு :
30 சென்டி மீட்டர் விட்டம் கொண்ட வெண்கல வட்டான இது 2.2 கிலோ எடை கொண்டுள்ளது.
எடை :
வட்டில் உள்ள படங்கள் - ஒரு சூரியன் அல்லது முழு நிலவு, ஒரு சந்திர பிறை, மற்றும் நட்சத்திரங்கள் , குறிப்பாக பீலியேட்ஸ் எனப்படும் கார்த்திகை (நாள்மீன் கூட்டம்) நட்சத்திரத்தை விளக்கிறது.
கார்த்திகை :
விசித்திரம் என்னவென்றால் இந்த வட்டு மிகவும் தனிதன்மை கொண்டுள்ளது அதாவது இந்த வட்டு உருவான காலத்தில் எந்த அறியப்பட்ட கலை பாணியிலும் இது சேரவில்லை.
கலை பாணி :
ஜெர்மனியின் சாக்சனி அன்ஹால்ட் அருகே நெப்ரா என்ற பகுதியில் கிடைத்த இந்த வட்டின் காலம் கிமு1600 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
காலம் :
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இது எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான படங்களை விட குறைந்தது இருநூறு ஆண்டுகள் பழமையானதாக இந்த வட்டு இருக்கும் என்று நம்பப் படுகிறது.
இருநூறு ஆண்டுகள் :
ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் படி இந்த வட்டு சூரிய மற்றும் சந்திர நாள்காட்டி இணக்கத்தில் ஆன ஒரு சிக்கலான வானியல் கடிகாரம் என்றும் நம்பப்படுகிறது.
வானியல் கடிகாரம் :
வெண்கல வயது வானியல் ஆய்வாளர்கள் இந்த நெப்ரா கடிகாரம் ஆனது வான் பொருட்களின் நிலையை கண்காணிக்க வேண்டி உருவாக்கம் பெற்றிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
வான் பொருட்களின் நிலை :
இது போலியானது இல்லை என்று நிரூபிக்கப்பட்ட பின்பும் இதன் உருவாக்கம் மற்றும் விளக்கம் ஆகியவைகள் அனைத்துமே இன்றுவரையிலாக தெளிவில்லாத குழப்பமான நிலையில் தான் உள்ளன..!
குழப்பமான நிலை :

கருத்துரையிடுக Disqus

 
Top