0

: டிஜிட்டல் தகவல் திருட்டு, இணையதளத்தை முடக்குதல் மற்றும் பிறரது டிஜிட்டல் தகவல்களை திருடி விற்பனை செய்வது போன்றவை சைபர் குற்றம் எனப்படும். உலகில் வேகமாக அதிகரித்து வரும் இது போன்ற குற்றங்களில் மிகப்பெரிய இணையதள நிறுவனங்கள் துவங்கி சாமானியரும் பாதிக்கப்பட்டு கொண்டே தான் வருகின்றனர்.

உலகெங்கும் வேகமாக வளர்ந்து வரும் துறையாக சைபர் செக்யூரிட்டி இருக்கும் நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் 2,30,000 புதிய மால்வேர்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இத்தகவல் சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கின்றது. சைபர் தாக்குதல்களை நிகழ்த்த மட்டும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் இத்துறைக்கு அறிமுகமாகி வருகின்றனர்.


உலகெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களின் மதிப்பு சுமார் 10,000 கோடி டாலர் வரை அதிகரித்திருக்கின்றது. இவை பெரும் நிறுவனங்களில் துவங்கி தனிநபர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பு
இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட அனைவரும் சைபர் குற்றத்தின் இலக்கு தான் எனலாம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் சைபர் குற்றம் குறித்து வரிவான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
இண்டர்நெட்
உலகெங்கும் நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்களில் மிகவும் தேடப்படுவோர் பட்டியலில் மொத்தம் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒவ்வொருத்தர் மீதும் சுமார் $350,000 முதல் $100 மில்லியன் மதிப்பிலான தரவுகளை அழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு இவர்கள் மீது பினைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள்
உலகளவில் மிகவும் விலை உயர்ந்த வைரஸ் மைடூம் (MyDomm) ஆகும். இதன் மூலம் சுமார் $3850 கோடி இழப்பீடு ஏற்பட்டது. இந்த வரைஸ் முதன் முதலில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டறியப்பட்டது. மேலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும் மின்னஞ்சல் கிருமியாக உருவானது.
விலை உயர்ந்த வைரஸ்
உலகெங்கும் சுமார் 160 கோடி பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர், இவர்களில் 64 சதவீதம் பேர் சமூக வலைத்தள சேவைகளை ஆன்லைனில் இயக்குகின்றனர். இதனால் ஹேக்கர்களும் வைரஸ் கிருமிகளை சமூக வலைத்தளங்களையே அதிகம் பரப்புகின்றனர். நாள் ஒன்றிற்கு மட்டும் 6,00,000 ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக்கர்கள் குறி வைக்கின்றனர்.
சமூக வலைத்தளம்
ஆரக்கிள் ஜாவா, அடோப் ரீடர், அடோப் பிளாஷ் போன்ற மென்பொருள்கள் 99 சதவீத கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் விளம்பரங்கள் அதிகம் என்பதால் பயனர்களின் ஒரே கிளிக் அவர்களை ஹேக்கர்கள் வசம் கொண்டு செல்லும் தன்மை கொண்டவையாகும்.
பாதிப்பு
உலகம் முழுக்க நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும். கன நேரத்தில் நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல்களை அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
தாக்குதல்
சைபர் தாக்குதல்களில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க உங்களது தரவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இண்டர்நெட் பயன்படுத்தும் போது 'https' எனத் துவங்கும் இணையதளங்களைப் பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு முகவரி கொண்ட தளங்கள் பாதுகாப்பானவை ஆகும்.
பாதுகாப்பு
சீரான இடைவெளியில் உங்களது ஆன்லைன் கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவது நல்லது. மேலும் இண்டர்நெட் வங்கி சேவைகளுக்கான கடவுச்சொற்களையும் மாற்ற வேண்டும். முடிந்த வரை கடினமான கடவுச்சொல் தேர்வு செய்ய வேண்டும்.
கடவுச்சொல்
நீங்கள் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களையும் அப்டேட் செய்வது நல்லது. சீரான இடைவெளியில் கணினி மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வது தேவையில்லாத சிக்கல்களில் இருந்து காப்பாற்றும்.

கருத்துரையிடுக Disqus

 
Top