0

பூமியில் உள்ள எந்தவொரு புவியியல் அம்சமும் நம் ஆர்வத்தையும், நமக்குள் இருக்கும் அச்சத்தையும் இந்த அளவிற்கு தூண்டி விடாது. கிரகத்தின் மேற்ப்பரப்பில் இருந்து 'மைய நரகத்திற்கு' நம்மை ஈர்க்கும் ஒரு மாபெரும் இருண்ட துளைகள் தான் அந்த புவியியல் அம்சங்கள்..!

சில விடயங்களை தூரத்தில் இருந்து கொண்டே உணர்ந்து கொள்வது தான் நமக்கெல்லாம் நல்லது. இந்த பூமி குழிகளும் அப்படித்தான். நாம் பூமி மேல பாதுகாப்பாக இல்லை நமக்கு கீழ் ஒரு பெரும் இருள் இருக்கிறது நொடியில் அனைத்தையும் மாற்றி அமைக்கும் சக்தி அதற்கு உள்ளது என்பதை நிரூபிக்கும் அடிப்படையில் நரகத்தின்' நுழைவாயில்கள் என்று கூறப்படும் பூமி குழிகளை தான் கீழ்வரும் ஸ்லாவ்ய்டர்களில் தொகுத்துளோம்..!
'நரகத்தின்' நுழைவாயில்#01

டீன்'ஸ் ப்ளூ ஹோல், லாங் தீவு, பஹாமாஸ் (Dean's Blue Hole in Long Island, Bahamas)

பெரிய ஓட்டை :
கடல் மட்டத்தில் உள்ள எந்தவொரு பெரிய ஓட்டையை விடவும் இது பெரியதாகும். பூமிக்குள் செல்வது போல நுழைவு கொண்டது.
ஆழம் :
பெரும்பாலும் இது போன்ற துளைகள் நூறு அடி ஆழமானதாகத்தான் இருக்கும் ஆனால் பஹாமாஸில் உள்ள இது 660 அடி ஆழம் வரை செல்கிறது.
கீழே :
இதன் கீழே என்ன இருக்கிறது என்பதை யாருமே தெரிந்து கொள்ள விரும்ப, மாட்டார்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது.
'நரகத்தின்' நுழைவாயில்#02
மவுண்ட் பல்டி சின்க் ஹோல், இந்தியாவானா (Mount Baldy Sink Hole in Indiana)
மிச்சிகன் ஏரி :
இந்தியானாவின் மிச்சிகன் ஏரியில் அருகே மவுண்ட் பல்டி மண் திட்டில் இதுபோன்ற புதை குழிகள் உருவாகின்றன.
சிக்கி கொண்டு :
2011-ல் ஒரு சிறுவன் இதனுள் சிக்கி கொண்டு, அதிர்ஷ்டவசமாக ஒரு சில மணி நேரம் கழித்து காப்பாற்றப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழம் :
இந்த குழிகள் சுமார் 11அடி ஆழம் வரையிலாக செல்கின்றன.
'நரகத்தின்' நுழைவாயில்#03
ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வக ஹோல் (Ice Cube Neutrino Observatory Hole)
தென் துருவத்தில் :
உண்மையில் தென் துருவத்தில் சூடான குழாய்கள் மூலமாக தோண்டப்பட்ட 86 துளைகள் உள்ளன..!
ஆழம்:
இந்த குறிப்பிட்ட ஐஸ் கியூப் நியூட்ரினோ ஆய்வகதுளையானது சுமார் 1.5 மைல்கள் ஆழமானதாகும்.
ஆராய்ச்சி :
தென் துருவ தொலைநோக்கி பயன்படுத்தி நியூட்ரினோக்களை கண்காணிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த துளைகளை பயன்படுத்துகின்றனர்.
'நரகத்தின்' நுழைவாயில்#04
ஜெயிண்ட் ப்ளூ ஹோல், பெலிஸ் (Giant Blue Hole in Belize)
ஆழம்:
கடலில் காணப்படும் மற்றொரு நீல துளையான இதன் ஆழம் - 4067 அடி..!
ஆபத்தான இடமும் கூட:
உலகின் டாப் ஸ்கூபா டைவிங் இடங்களில் இதுவும் ஒரு உடன் மிகவும் ஆபத்தான இடமும் கூட..!
'நரகத்தின்' நுழைவாயில்#05
குளோரி ஹோல, மான்டிசெல்லோ அணை, கலிபோர்னியா ( Glory Hole at the Monticello Dam in California)
ஆழம் :
இந்த குளோரி துளையானது சுமார் 304 அடி ஆழம் கொண்டது..!
சுமார் 48,000 கன அடி :
சுமார் 48,000 கன அடி :
மனிதனால் கட்டமைக்கப்பட்ட மான்டிசெல்லோ அணை அணையானது நொடிக்கு சுமார் 48,000 கன அடி நீரை எட்டும் போது இந்த குளோரி துளை உபயோகிக்கப்படும்.
கான்கிரீட் குழாய் :
இந்த மகத்தான கான்கிரீட் குழாய் மூலம் சுமார் 700 அடி உயர நீரை காலியாக்கி விட முடியும்.
'நரகத்தின்' நுழைவாயில்#06
குவாத்தமாலா நகரில் ஏற்பட்ட சின்க் ஹோல் (Guatemala City Sinkhole)
2010 :
இந்த புதைகுழியானது 2010-ஆம் ஆண்டில் குவாத்தமாலா நகரில் ஏற்பட்டு கட்டுமானத்தில் இருந்த 3 கட்டிடங்களை விழுங்கியது.
ஆழம் :
இதன் ஆழம் சுமார் 100 அடி என்று பின்னர் கண்டறியப்பட்டது.

கருத்துரையிடுக Disqus

 
Top