0

வாட்ஸ்ஆப் நம்மாளுங்களோட பணத்தை மிச்சம் படுத்தவும், அவங்களையே கழுவி கழுவி ஊத்தவும் நல்லா வேலை செய்யுதுனு சொல்லலாம். இப்போ இது முக்கியமில்லை, வாட்ஸ்ஆப் காரன் ஏற்கனவே கொடுத்த ஆப்ஷன்களை யூஸ் பண்ணவே நேரம் இல்லை, இதுல இவனுங்க இன்னும் புதுசா புதுசா சில ஆப்ஷன்களை கொடுக்கப்போறாங்களாம்.

அப்படி வாட்ஸ்ஆப்'இல் இதுவரை கொடுக்கப்படாத ஆனால் சீக்கிரமே கொடுக்கப்பட இருக்கும் சில அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்க..!


வாட்ஸ்ஆப் பீட்டா 2.16.189 பதிப்பில் கால் பேக் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்ஆப் கால் துண்டிக்கப்பட்டவுடன் திரையில் தோன்றுகின்றது. இந்த அம்சம் வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

கால் பேக்
தற்சமயம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் வாய்ஸ் மெயில் அனுப்ப முடியும். இதற்கு சாட் பாக்ஸ் அருகில் இருக்கும் மைக் பட்டனை கிளிக் செய்து குரலை பதிவு செய்து உடனே அதனை அனுப்ப முடியும்.

வாய்ஸ் மெயில்
அதாவது மேற்கோள் காட்டும் அம்சம் தான் வாட்ஸ்ஆப் ஆங்கிலத்தில் கோட்ஸ் எனக் குறிப்பிடுகின்றது. இதன் மூலம் தகவல்களை பரிமாறும் போது குறிப்பிட்ட தகவல்களை மேற்கோள் செய்ய முடியும். இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது.

கோட்ஸ்
அதாவது வாட்ஸ்ஆப் தெரியும் எழுத்துக்கள் பல்வேறு விதங்களில் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகின்றது. சமீபத்தில் இந்த அம்சம் சத்தமில்லாமல் வழங்கப்பட்டது என்றாலும் இதன் பயன்பாடு சிரமமாக இருப்பதால் இதனை வாட்ஸ்ஆப் எளிமையாக மாற்றலாம் எனக் கூறப்படுகின்றது.

ஃபான்ட்ஸ்
ஏற்கனவே இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. வாட்ஸ்ஆப் நிறுவனமும் தனது செயலியில் பாடல்களை மற்ற கருவிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் ஆப்பிள் மியூசிக் சேவைகளிலும் வேலை செய்யும்.

மியூசிக் ஷேரிங்
இந்த அம்சம் ஃபேஸ்புக் மென்ஷன்ஸ் போல வேலை செய்யும். இதைக் கொண்டு க்ரூப் மெசேஜிங் செய்யும் போது ஒருவரின் மெசேஜ்களை மட்டும் தனியே பிரிக்கத் தகவல்கள் வேறு நிறத்தில் தெரியும். இந்த அம்சத்தினை ஒருவர் மற்றவருக்கு அனுப்பும் லின்க் மூலம் ஆக்டிவேட் செய்ய நேரிடும் என்றும் கூறப்படுகின்றது.

க்ரூப் இன்வைட்
முதலில் ஐஓஎஸ் இயங்குதளங்களில் மட்டும் ஜிஃப் வசதி வழங்கப்படுகிறதாம். இந்த அம்சம் ஏற்கனவே ஐஓஎஸ் பீட்டா 2.16.7.1 பதிப்பில் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜிஃப்
தற்சமயம் வாட்ஸ்ஆப்'இல் எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன, ஆனாலும் இன்னும் பெரிய அளவு எமோஜிக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இதே போல் ஐஓஎஸ் 10 இயங்குதளத்திலும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிக் எமோஜி
மே மாதம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட வீடியோ காலிங் அம்சம் தொடர்ச்சியான அப்டேட்களில் நீக்கப்பட்டது. என்றாலும் இந்த அம்சம் மிக விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வீடியோ காலிங்

கருத்துரையிடுக Disqus

 
Top