0


யூஎப்ஓ (UFO - Unidentified flying object) என்றால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் என்று அர்த்தம். பெரும்பாலும் யூஎப்ஒக்கள் வேற்றுகிரகவாசிகளின் வாகனம் என்ற நம்பிக்கை உள்ளது.

அதே சமயம் வெளியாகும் பெரும்பாலான யூஎப்ஓ சார்ந்த பதிவுகள் வெறும் புரளியாகவே இருந்தாலும் மறுபக்கம் உண்மையாகவே சில மர்மமான பறக்கும் பொருட்கள் பதிவு செட்டப்பட்டுள்ளன என்பதும் நிதர்சனமே. ஆகையால் புரளிகளாக இருந்தாலும் சரி, நிஜமானதாக இருந்தாலும் சரி யுஎஃப்ஒ நிபுணத்துவம் மிக்க புலனாய்வாளர்கள் அவைகளை நுண்ணாய்வு செய்து பார்க்க தவறுவதில்லை..!


சமீபத்தில் உத்திர பிரதேசத்தின் கோரக்பூரில் பறக்கும் தட்டு தோன்றியதாக புகைப்படம் பதிவு செய்யப்பட்டு முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வைரலாகி வருகிறது.
பறக்கும் தட்டு :
அந்த யுஎஃப்ஒ படங்கள் ஒரு பெரிய பறக்கும் தட்டு கோரக்பூரின் பத்ரி சந்தையின் மேலே உலாவிய போது பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்ரி சந்தை :
குறிப்பிட்ட உபி பறக்கும் தட்டு புகைப்படங்கள் ஆனது பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக தளங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டு வைரல் ஆகி கொண்டு வருகின்றன.
வைரல் :
இந்த யுஎஃப்ஒ படங்களை ரின்க்கு (Rinku) என்பவர் பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த படங்கள் கோரக்பூர் பல்கலைக்கழ நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வு :
மறுபக்கம் கோரக்பூர் மாவட்ட நிர்வாகம் இதுவொரு புரளி என்றும் இதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் :
இதற்கு முன்பு, இதே போன்ற ஒரு பறக்கும் தட்டானது லக்னோ மற்றும் கான்பூரில் தோன்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக்னோ மற்றும் கான்பூர் :
முன்னதாக, கான்பூர் சிறுவன் அபிஜீத் குப்தா மற்றும் அவரது தந்தை சந்தோஷ் குப்தாவின் கூற்றுப்படி ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஷ்யாம்நகர் (Shaymanagar) வட்டாரத்தில் காணப்பட்டது.
ஷ்யாம்நகர் :
கடைசியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பிப்ரவரி 2014-ல் யுஎஃப்ஒ கண்டறியுப்பட்டதாக அறிக்கை பதிவாகியுள்ளது என்பதும் அதுவொரு பாதுகாப்பு விமானமாக இருக்கலாம் என்று விசாரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை :
பெரும்பாலான யுஎஃப்ஒ பதிவுகள் அமெரிக்காவில் தான் நிகழ்ந்துள்ளது (குறிப்பாக நெவாடா பாலைவனத்தில் - Nevada desert).
நெவாடா :
அமெரிக்க தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஆனது ஏலியன் நம்பிக்கையை விதைக்கும் ஏகப்பட்ட படங்கள், வீடியோ - ஆடியோ மற்றும் யுஎஃப்ஒ ஆதாரங்களை வெளியிட்டுக்கு கொண்டே தான் இருக்கிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top