0

ஸ்மார்ட்போன், டேப்ளெட், லேப்டாப் என எல்லாக் கருவிகளிலும் தொடு திரை என்ற டச் ஸ்கிரீன் மயமாகி விட்டது. முதல் முறை திரையைப் பயன்படுத்த துவங்கி அதிகம் பழகிய பின் திடீரெனத் தொல்லை கொடுத்தால், யாராக இருந்தாலும் மனம் நொந்து போகக் கூடும்.

அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் கருவிகளிலும் தொடு திரை தொல்லை கொடுத்தால், கொஞ்சம் கவலை கொண்டு பின் ஸ்லைடர்களில் வழங்கப்பட்டிருக்கும் தந்திரங்களைப் பயன்படுத்திச் சரி செய்திடுங்கள்..


பொதுவாகத் தொடு திரை வேலை செய்யாமல் திடீரெனக் கருவி ஹேங் ஆகும் போது கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து அதன் பின் கருவியை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும் அதன் பின் கருவியின் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் பயன்படுத்தாத ஆப்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ரேம் மெமரி மீட்கப்பட்டுக் கருவியின் வேகம் சீராக இருக்கும்.

ரேம்
தொடு திரை வேலை செய்யாமல் இருக்கும் போது கருவியை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் உண்மையான பிரச்சனை என்னவென்று அறிந்து கொள்ள முடியும்.

ரீஸ்டார்ட்
நீங்கள் பயன்படுத்தும் கருவி பழையது மற்றும் கருவியின் வாரண்டி இல்லாமல் உங்களால் கருவியின் திரையைக் கழற்றி மாட்ட முடியும் என்றால் இதனை முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
டிஸ்ப்ளே
சில சமயம் கருவியின் திரை நன்றாக வேலை செய்யும், நீங்கள் பயன்படுத்தும் செயலியிலும் கோளாறு இருக்கலாம். இதனால் கருவியை ரீஸ்டார்ட் செய்து நீங்கள் பயன்படுத்திய செயலி இல்லாமல் போனினை இயக்கிப் பார்க்கலாம். ஒரு வேலைச் சீராக இயங்கும் பட்சத்தில் கோளாறான செயலியை அன் இன்ஸ்டால் செய்யலாம்.
 
ஆப்ஸ்
இந்தத் தொகுப்பில் வழங்கப்பட்டிருக்கும் தந்திரங்கள் பெரும்பாலான கருவிகளுக்கும் பொருந்தும். மேலும் கருவியை நீங்களாகக் கழற்றி சரி பார்க்க நேரும் போது சற்றே கவனமாக இருப்பது நல்லது.

கருத்துரையிடுக Disqus

 
Top