0


ஜூலை 06, 2016 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டி கேம் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக மேலும் சில நாடுகளிலும் போக்கிமான் கோ வெளியிடப்பட்டது. அதன் பின் உலகெங்கும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்கிமான் கோ தொடர்ந்து ட்ரென்ட் ஆனது. இதன் விளைவாகக் கூகுள் தேடலில் புதிய சாதனைப் படைத்தது.



போக்கிமான் கோ மோகம் அதிகரிக்க அமெரிக்காவில் இந்தக் கேம் விளையாடுவதால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் போக்கிமான் கோ அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் போக்கிமான் கோ விளையாடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

போக்கிமான் கோ விளையாடும் போது இதுவரை கோவில்களுக்குச் செல்லாதவர்களும் முதல் முறையாகக் கோவில்களுக்குச் சென்று வருவதாக, இதனை விளையாடியவர்கள் ட்விட்டரில் குமுறியுள்ளனர். போக்கிமான் கோ கேம், உலகம் முழுக்க இந்த அளவு மக்களை ஈர்க்கக் காரணம் என்ன என்பதைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..


இந்தக் கேம் திரையில் தெரியும் விர்ச்சுவல் போக்கிமான் கதாப்பாத்திரங்களை நாம் வாழும் நிஜ இடங்களுக்கு நேரடியாகச் சென்று கண்டுபிடிப்பதைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கேம் நமது ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் மற்றும் மே பயன்படுத்துகின்றது.
போக்கிமான் கோ

டிஜிட்டல் கேம்கள் மக்களிடையே அதிக வரவேற்பு பெற முக்கியக் காரணம் என்ன என்பதை ஆக்ஸ்போர்டு இண்டர்நெட் மையத்தின் உளவியல் நிபுணர் ஆண்ட்ரூ சைபெல்ஸ்கி என்பவர் ஆய்வு செய்திருக்கின்றார்.
ஆய்வு

'முன்னதாக வெற்றி பெற்றுப் பிரபலமான கேம்கள் - மக்களுக்குப் புதிதாய் அறிமுகமான, அதே சமயம் அவர்கள் பயன்படுத்த ஏதுவாகவும் இருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்குவதாக அமைந்திருக்கின்றது' என ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
வரலாறு

எந்த ஒரு டிஜிட்டல் கேம் ஆனாலும் அதில் மக்களை மகிழ்விக்கும் கற்பனை கலந்த மகிழ்ச்சியளிப்பதாய் இருக்க வேண்டும், அந்த வகையில் போக்கிமான் கோ வெற்றி கண்டுள்ளது.
ஏக்கம்

கேம் விளையாடுபவர்களை மகிழ்விக்கக் கேமர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அவர்களைச் சமூகத்தில் மற்றவர்களுடன் இணைப்பதாக இருக்க வேண்டும், இவை அனைத்தும் நிறைந்த கேமாகப் போக்கிமான் கோ இருக்கின்றது.
மகிழ்ச்சி

போக்கிமான் கோ கேமர்களை வீதிகளில் நடக்க வழி செகின்றது, இதன் மூலம் கேமர்கள் திரையில் முழுக் கவனம் கொண்டிருக்கின்றனர். கேமர்களைக் கவரும் வகையில் அவர்கள் பயணிக்கும் இடங்களைப் பிரதிபலிக்கும் அழகிய வரைபடங்களைக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் கேமர்கள் அதிகம் கேமோடு இணைக்கப்படுகின்றனர்.
இடம்

போக்கிமான் கோ, தனி நபர் கேம் என்பதோடு இது கேமர்களைச் சமூக வலைத்தள மக்களோடு இணைக்கவும் பாலமாக அமைகின்றது. இந்தக் கேம் விளையாடும் போது மக்கள் புதிய நண்பர்களைச் சமூக வலைத்தளங்களில் சந்திக்கின்றனர்.
சமூக வலைத்தளம்

மக்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே போக்கிமான் கோ சமூக வலைத்தளப் பிரியர்களுக்கான கேமாகவும் இருக்கின்றது. அந்த வகையில் நவீன சமூக வலைத்தள உலகம் மக்களைப் போக்கிமான் கோ விளையாட தயார் செய்து விட்டது என ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
போக்கிமான் கோ

எத்தனைக் காலம் மக்கள் போக்கிமான் கோ மீது மோகம் கொண்டிருப்பர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இந்தக் கேம் வெற்றி பெற முக்கிய அம்சமாகச் சமூக வலைத்தளங்கள் விளங்கியிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
காலம்

பொதுவாகச் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரென்ட் ஆன விடயங்களைத் தெரிந்து கொள்ள அனைவரும் விரும்புவர். இதே காரணம் தான் போக்கிமான் கோ வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருக்கலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top