0

அதீத புத்திசாலிகளுக்கு மட்டுமே தெரியும் நம்மிடம் இருக்கும் தலைசிறந்த அறிவியல் கோட்பாடுகள் எல்லாம் கோட்பாடுகள் (theories) அல்ல கருதுகோள்கள் (hypothesis) என்று, அதாவது அறிவியல் தொழில்நுட்பத்தில் நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அளவிலான வளர்ச்சியை அடையவில்லை என்று பொருள்..!

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மனித மூளை - உடலின் மிக சிக்கலான மற்றும் மிக சிறிதளவில் புரிந்து கொள்ளப்படும் பகுதிகளில் ஒன்றாகும் .

துரதிர்ஷ்டவசமாக, அது மிகவும் எளிமையானதாக இல்லாததால் மூளையைப்பற்றி இன்னும் அதிகம் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் நாம் உள்ளோம். அப்படியாக விஞ்ஞானிகளால் இன்றும் புரிந்துகொள்ள முடியாத மூளை பற்றிய சில சுவாரசியமான ரகசியங்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துளோம்..!


மூளை எபப்டி இவ்வளவு செயல்படுகிறது ..?

கேள்வி #06 :
மூளை ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் தேவ்காம் கொண்டது என்பார்கள் ஆனால் அது உண்மையில் நம்பமுடியாத வண்ணம் மெதுவாகத்தான் உள்ளது. கம்ப்யூட்டரை விட மிக மிக மெதுவாக தான் செயல்படுகிறது.

நம்பமுடியாத வண்ணம் :
ஆனால், அதிக செயல்பாட்டின் போது இணை செயலாக்க கணினிகள் கீழே தாமதம் நிகழ்த்தும் ஆனால் மூளையோ ஒரு ஒற்றை சிந்தனை, நடத்தை அல்லது நினைவகம் ஆகிய ஏதோ ஒன்றை பயன்படுத்தி மின்னல் வேகத்தில் வகைப்படுத்தி விடுகிறது.

மின்னல் வேகத்தில் :
ஆளுமை எங்கே இருந்து வருகிறது..?

கேள்வி #05
உங்கள் ஆளுமையானது உங்கள் மூளைக்குள் தான் வாழ்கிறது. ஆனால் பல நூறு ஆண்டுகளாக ஒரு நபரின் ஆளுமையானது அவரின் மூளையை வைத்து எடை போடப்படாமல், மரபணுக்களை மட்டும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

மரபணு
ஏன் நாம் தூங்குகிறோம் மற்றும் ஏன் கனவு காணுகிறோம்

கேள்வி #04
உங்கள் வாழ்க்கையின் மூன்றின் ஒரு பங்கில் நீங்கள் மயக்கத்தில், பாதுகாப்பற்ற நிலையில் தூக்கம் கொள்கிறீர்கள். தூக்கம் மிக மிக அவசியம் தான் ஆனால் தெளிவாக நாம் ஏன் தூங்குகிறோம் என்பதற்கு விடை கிடையாது.

தூக்கம் :
கனவு - சீரற்ற நரம்பியல், யூகங்கள் நிறைந்த ஆழமான கற்றல், நினைவக ஒருங்கிணைப்பு போன்றவைகளால் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கனவு ஒரு மர்மம் நிறைந்த புதிர்தான்..!

மர்மம் :
எப்படி நாம் நினைவுகளை சேமிக்கிறோம்.?

கேள்வி #03
உண்மையில் நியூரான்களின் பல்வேறு சேர்க்கைகளின் விளைவு தான் நினைவக சேமிப்புக்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் நினைவுகள் முதலில் எங்கே சேமிக்கப்படுகிறது, சிலசமயம் அவைகள் ஏன் அழிந்து போகிறது, மறந்து போகிறது. சில தவறான நினைவுகள் வர என்ன காரணம் போன்ற கேள்விகளுக்கு பதில்கள் இங்கில்லை..!

சேமிப்புக்கு காரணம் :
எப்படி எல்லாமே சுமூகமாக வேலை செய்கிறது..?

கேள்வி #02
நம் மூளை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு கோணத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு சமிக்ஞைகளை பெற்று கையாள வேண்டும் ஆனால் அதை அனைத்தையும் சுமூகமாக குழப்பமின்றி மூளை எப்படி நிகழ்த்துகிறது என்பது புதிர்தான்.

குழப்பமின்றி :
உணர்வு என்றால் என்ன..?

கேள்வி #01
மூளையில் உணர்வு அனுபவம் எதனால் உருவாகுகிறது..? - இந்த சாத்தியமான மனித மனத்தின் மிகப்பெரிய மர்மமாகும்..!

அனுபவம் :

கருத்துரையிடுக Disqus

 
Top