0

ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி சிம் கார்டுகளின் பிரீவியூ சேவையை அறிவித்தது இன்னும் பெரும்பாலானோரால் நம்ப முடியாத ஒன்றாக இருக்கின்றது. முதல் மூன்று மாதங்களுக்கு அன்-லிமிட்டெட் 4ஜி சேவை மற்றும் வாய்ஸ் கால் வழங்கினால் எப்படி நம்புவது? என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்த வரை இந்தச் சேவையை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். முதலில் ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பரிசோதனை சிம் கார்டுகள், லைஃப் ஸ்மார்ட்போன்களில் மட்டும் வேலை செய்யும் என அறிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோவின் லைஃப் கருவிகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஜியோ பிரீவியூ சேவை இன்று வரை சாம்சங், எல்ஜி, ஆப்பிள், பானாசோனிக் என பல்வேறு நிறுவனங்களின் கருவிகளுக்கும் இந்தச் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.


முன்பை போல் இனி மைஜியோ ஆப் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, மாறாகச் சேவை வழங்குவோர் சார்பில் பிரத்தியேக கோடு வழஙக்கப்படும். இதற்கு நேரடியாக ரிலையன்ஸ் டிஜிட்டல், மினி ஸ்டோர் சென்று சிம் கார்டினை இலவசமாகப் பெற முடியும்.

செயலி
இந்த பிரீவியூ சேவையின் மூலம் 90 நாட்களுக்கு இலவச அன்-லிமிட்டெட் 4ஜி டேட்டா, வாய்ஸ் கால், மெசேஜ் போன்றவற்றை இலவசமாகப் பெற முடியும்.

பிரீவியூ
இலவச ஜியோ சிம் கார்டு பெறும் சேவையினை ரிலையன்ஸ் மிகவும் எளிமையாக்கியுள்ளது. இதற்கு உங்களது அடையாள சான்றுகளுடன் நேரடியாக ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் சென்று வழங்கினால் போதுமானது.

தரவுகள்
நேரடி விற்பனை முறையில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை இலவசமாகப் பெற முடியும். இதற்கென எவ்வித கூப்பன் கோடுகளை வழங்க வேண்டிய அவசியம் கிடையாது. முன்னதாக ஜியோ பிரீவியூ சேவையானது ஜியோ ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

விற்பனை
பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் அல்லது அழைப்பு வந்தவுடன் உங்களது 4ஜி சிம் கார்டினை ஆக்டிவேட் செய்யலாம். சிம் கார்டு பொருத்தி சிக்னல் பார்கள் வந்தவுடன் ஜியோஜாயின் செயலியை டவுன்லோடு செய்து அழைப்புகளை மேற்கொள்ள முடியும். லைஃப் அல்லாத எவ்வித கருவியை பயன்படுத்தும் போதும் இந்தச் செயலியை டவுன்லோடு செய்வது அவசியமாகும்.

ஆக்டிவேட்
இந்த பிரீவியூ சேவையானது ஜியோ ஆப் சூட் சேவைக்கான அன்-லிமிட்டெட் பயன்களை வழங்குகின்றது. இதில் ஜியோபிளே, ஜியோஆன்டிமான்ட், ஜியோபீட்ஸ், ஜியோஎக்ஸ்பிரஸ்நியூஸ் போன்று பல்வேறு செயலிகள் இடம் பெற்றுள்ளன.

ஜியோ ஆப் சூட்
Dailyhunt

கருத்துரையிடுக Disqus

 
Top