0

தற்போதைய டெக்னாலஜி உலகில் மூட்டை மூட்டையாய் கையில் கொண்டு செல்லும் பைல்கள் அனைத்தையும் வெகு சுலபமாக ஒரு சின்ன மெமரி கார்டில் பதிவு செய்துவிடலாம்.

திருமண ஆல்பமோ, சுற்றுலா சென்ற புகைப்படமோ, அல்லது முக்கியமான அலுவலக டாக்குமெண்ட்களோ அனைத்தையும் ஒரு சிறு அளவில் உள்ள மெமரி கார்டில் பதிவு செய்து எங்கெங்கு தேவையோ அங்கு அவைகளை உபயோகப்படுத்தி கொள்ளலாம். டேமேஜ் ஆகிவிட்டால் அவ்வளவுதான்.
நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்போது நாம் பதிவு செய்த பைல்கள் மறைந்திருக்கும். அல்லது அப்படியே மறையாமல் இருந்தாலும் ஓப்பன் ஆகாது. இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் எனபதை பார்ப்போமா!! 
 1. வேறு கம்ப்யூட்டரில் போட்டு பாருங்கள்:
டேமேஜ் ஆன மெமரி கார்டு ஒரு கம்ப்யூட்டரில் தோன்றவில்லை என்றால் மற்றொரு கம்ப்யூட்டரிலோ அல்லது வேறு சில கம்ப்யூட்டரிலோ போட்டு பாருங்கள். சில சமயம் வேறு கம்ப்யூட்டரில் மெமரி கார்டு ஒப்பன் ஆக வாய்ப்பு உண்டு.

2. டிஸ்க் ஸ்கேனை செக் செய்யுங்கள்
முதல் வழி வொர்க் அவுட் ஆகாத நிலையில் கார்ட் ரீடரில் டேமேஜ் ஆன மெமரி கார்டை போட்டு கம்ப்யூட்டரில் இன்சர்ட் செய்யுங்கள் மெமரி கார்டு பகுதி தோன்றியதும் ஸ்டார்ட் டைப் செய்து cmd என்று டைப் செய்யுங்கள். பின்னர் கமாண்ட் விண்டோ ஒப்பன் அனவுடன் chkdsk என்று டைப் செய்து அதன் பின்னர் கீழே உள்ள படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் செய்யுங்கள்

3. புதிய டிரைவரில் ஓப்பன் செய்யுங்கள்:
டேமேஜ் ஆன மெமரி கார்டை சொருகியவுடன் சில சமயம் உங்கள் பென் டிரைவர் எந்த டிரைவரிலும் சேராது. இந்த சமயத்தில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் செட்டிங் சென்று E என்ற் புதிய டிரைவர் ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் செயல்படுங்கள்

4. இந்த வழியையும் பயன்படுத்தலாமே!
பென் டிரைவ் உள்ள ஆப்ஷனுக்கு சென்று ரைட் க்ளிக் செய்து பிராப்பர்ட்டீஸ் என்ற பகுதியை ஓப்பன் செய்து பார்த்தால் சில சமயம் அது காலியாக இருக்கும், அல்லது பைல்கள் அனைத்தும் டெலிட் செய்துவிட்டது போன்று காண்பிக்கும். இம்மாதிரியான சமயத்தில் Sandisk inbuilt solution வழியை பின்பற்றுங்கள். அது டெலிட் ஆன அனைத்து பைல்களையும் எளிதாக கொண்டு வந்துவிடும்.

5. இதுவும் ஒரு எளிதான வழிதான்:
கடைசியாக Disk diagnostic tool-இன் உதவியால் கார்டில் உள்ள டேட்டாக்களை கைப்பற்றிவிடலாம். மேலும் இணையதளங்களில் பல ரிகவரி சாப்ட்வேர்கள் உள்ளது. அவற்றின் உதவியாலும் நாம் இழந்த பைல்களை பெறலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top